www.garudabazaar.com

விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரனும் படம் நடிக்க வர்றாரா?.. வெளியான Stunning ஃபோட்டோஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழின் முன்னணி 80ஸ் மற்றும் 90ஸ் நடிகர் விஜயகாந்த் 2000-ஆம் ஆண்டுகளிலும் நடிப்புத்துறையில் புகழின் உச்சிக்கு சென்றார்.

is Vijayakanth son vijaya prabhakaran to act stunning pics

Vijayakanth :அத்தகைய முன்னணி நடிகரான விஜயகாந்த் கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தில் நடித்ததை தொடர்ந்து அவரை ரசிகர்களும் திரையுலகினரும் அன்போடு கேப்டன் என்று அழைக்க தொடங்கினர். திரைப்படங்களில் மட்டுமல்லாமல் திரையுலகில் நடிகர் சங்க தலைவராக வலம்வந்த விஜயகாந்த்தை இன்றும் கேப்டன் என்று அன்போடு அழைப்பதில் திரையுலகினர் ஆர்வமாக இருக்கின்றனர்.

is Vijayakanth son vijaya prabhakaran to act stunning pics

அதன் பின்னர் அரசியலில் களம் இறங்கிய விஜயகாந்த், நடித்ததுடன், அரசியலுக்கு வருவதாக சொன்னது, விறுவிறுவென தேர்தலில் நின்றது, கட்சியை நிர்வகித்தது என் பல விஷயங்களில் அடுத்தடுத்து சந்தித்த ஏறுமுகங்களுக்காக பலராலும் வாழ்த்தப்பெற்றார். பின்னர் விஜயகாந்த்துக்கு உடல்நிலை சரியில்லாமல் போக, கொஞ்ச காலம் சிகிச்சை எடுத்துக்கொண்டதுடன், வெளி நிகழ்ச்சிகளில் தலைதோன்றாமல் இருந்தார். தற்போது மீண்டும் விஜயகாந்த் உடல் நலம் தேறிவருகிறார். அண்மையில், விஜயகாந்த் பேசி சிரித்த வீடியோ இணையத்தில் வைரலானது.

is Vijayakanth son vijaya prabhakaran to act stunning pics

Shanmuga Pandian :இதனிடையே நடிகர் விஜயகாந்த்தின் மகன்களும் திரைத்துறையில் ஆர்வம் காட்டி வருகின்றனர். முன்னதாக விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடித்த மதுரை வீரன் உள்ளிட்ட திரைப்படங்கள் திரைக்கு வந்தன. பி.ஜி.முத்தையா இயக்கத்தில் வெளியான ‘மதுர வீரன்’ திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெளியானது. இந்த திரைப்படத்துக்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்திருந்தார். கிராமத்து கதைப் பின்னணியில் உருவான இந்த படம் வெகுஜன மத்தியில் ரீச் ஆனது. 

is Vijayakanth son vijaya prabhakaran to act stunning pics

Vijaya Prabhakaran : இந்நிலையில் விஜயகாந்தின் இன்னொரு மகனான விஜய பிரபாகரன் தேமுதிக அரசியல் கட்சிகளில் கவனம் செலுத்தி வந்தார். விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் மேடைகளில் அவ்வப்போது தோன்றி கட்சி உரைகளை ஆற்றி வந்த விஜய பிரபாகரன் அக்கட்சியினரால், இளைய கேப்டன் என்று அன்போடு அழைக்கப்பட்டு வருகிறார்.

is Vijayakanth son vijaya prabhakaran to act stunning pics

இந்த நிலையில் விஜய பிரபாகரனின் பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய தற்போதைய சில புதிய போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த புகைப்படங்களை அடுத்து, அவரும் அடுத்து திரைப் படங்களில் நடிக்கிறாரா? என்கிற கேள்விகளை இணையவாசிகள் எழுப்பி வருகின்றனர்.

is Vijayakanth son vijaya prabhakaran to act stunning pics

வேட்டி சட்டை அணிந்தும், ஜீன்ஸ் பேண்ட் என மாடர்ன் உடை அணிந்தும், கேப்டன் விஜயகாந்த் ஸ்டைலில் கண்ணாடி அணிந்து கொண்டு தம்ப்ஸ் அப் காட்டியும், காட்டியும் விதவிதமாக விஜய பிரபாகரன் எடுத்து வெளியிட்டு இருக்கும் இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வலம் வருகின்றன.

is Vijayakanth son vijaya prabhakaran to act stunning pics

இதனிடையே நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கும் 'மழை பிடிக்காத மனிதன்' எனும் சலிம் படத்தின் 2-ஆம் பாகம் படத்தில் நடிகர் விஜயகாந்த் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மீண்டும் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

is Vijayakanth son vijaya prabhakaran to act stunning pics

தீவிர அரசியல் செயல்பாடுகள் மற்றும் உடல்நிலை காரணமாக 2010க்கு பின் சினிமாவில் நடிக்காமல் இருந்த நடிகர் விஜயகாந்த், 2010ல் விருதகிரி படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

is Vijayakanth son vijaya prabhakaran to act stunning pics

People looking for online information on Abhagak, Shanmuga Pandian, Vijaya Prabhakaran, Vijayakanth, Vijayakanth reentry, Vijayakanth Son will find this news story useful.