www.garudabazaar.com

Divorce பதிவை அடுத்து ராம் கோபால் வர்மா அடுத்த ட்வீட்.. தெறிக்கவிடும் #MarriageStrike பதிவுகள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Divorce : பாலிவுட் இயக்குநர் ராம் கோபால் வர்மா, “திரை நட்த்திர பிரபலங்களின் விவாகரத்து தகவல்கள், இன்றைக்கு இருக்கும் இளைஞர்களுக்கு திருமணத்தின் ஆபத்துகளைப் பற்றி எச்சரிக்கும் அளவிலான நல்ல டிரெண்ட் செட்டர்கள்” என்று குறிப்பிட்டு, பதிவிட்டிருந்தார்.

Marriage Strike trending Ram Gopal Varma tweet over Divorce

ராம் கோபால் வர்மா பதிவு

இந்த பதிவு திருமணத்துக்கு எதிரான ராம் கோபால் வர்மாவின் இந்த மாற்றுப்பார்வை ரசிகர்கள் மத்தியில் இணையதளத்தில் படு வேகமாய் பரவி வைரல் ஆகியிருந்தது. இந்நிலையில் தான் ராம் கோபால் வர்மாவின் அடுத்த ஒரு பதிவும் தற்போது வைரலாகி வருகிறது.

ட்ரெண்ட் ஆகும் Marriage Strike

ஆனால், இந்த முறை இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் பதிவு வைரலாவதற்கு காரணம், அவருடைய கருத்து அல்ல. ஏற்கனவே ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் இருக்கும் ஒரு பிரபலமான ஹேஷ்டேக் தான். ஆம், அதுதான் Marriage Strike. திருமணத்துக்கு எதிரான கிளர்ச்சியை ஊக்குவிக்கும் இந்த ஹேஷ்டேகின் கீழ்தான் தற்போது ராம் கோபால் வர்மாவின் சமீபத்திய ட்வீட் பேசப்பட்டு வருகிறது.

ஆண்களிடம் டிமாண்ட் வைக்கப்படுகிறதா?

அதன்படி பலரும் திருமணத்தில் சடங்கு சம்பிரதாயங்கள் என்கிற பெயரிலான கட்டாய நிர்ப்பந்தங்கள், பெண்களுக்கு இருக்கும் வரதட்சணை ஆகியவற்றை போலவே, ஆண்களுக்கும் சில சிக்கல்கள் திருமணத்தில் எழுவதாய் பலரும் பேசி வருகின்றனர். குறிப்பாக ஆண்கள் திருமணத்துக்கு தயாராக வேண்டும் என்றால் அவருடைய வேலை, அதில் கிடைக்கும் சம்பளம், அதை தாண்டிய கார், சொந்த வீடு , முடிந்தால் வில்லா உள்ளிட்ட தேவைகள் எல்லாவற்றையும் அதிக பெண்கள் எதிர்பார்ப்பதாக பேசப்பட்டு வருகிறது.

ஆண்களுக்கு சுமை

மேலும் திருமண செலவுகளை பல இடங்களில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருமே சேர்ந்து ஏற்றுக்கொண்டால் கூட, அது மணமகனாக இருந்தாலும் சரி, மணமகளின் தந்தையாக இருந்தாலும் சரி அதன் பின்னாலான விளைவுகளையும் பொருளாதார சுமைகளையும் ஒரு ஆண் தான் தாங்க வேண்டியதாக உள்ளது என பேசப்பட்டு  வருகிறது.

திருமணம் தீய பழக்கம்

இந்த நிலையில் தான் பலரும், ராம் கோபால் வர்மாவின் புதிய ட்வீட்டில் இடம் பெற்றுள்ள, “துரதிர்ஷ்டம் மற்றும் சோகத்தினை தொடர்ந்து சுழற்சி முறையில் பறைசாற்றக்கூடிய இந்த திருமணம் என்பது, நமது மோசமான முன்னோர்களால் இந்த சமூகத்தின் மீது மிகவும் திணிக்கப்பட்டு வரும் ஒரு தீய பழக்கம்” என்கிற கருத்தை  #MarriageStrike என்கிற ஹேஷ்டேகின் கீழ் பகிர்ந்து வருகின்றனர்.

Also Read: குத்தலும் குடைச்சலும் கலந்ததுதான் வாழ்க்கை.. தொலைச்ச இடத்துல தான் தேடணும்.. கணவன் மனைவி பிரிவு குறித்து இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் வேதனை!

தொடர்புடைய இணைப்புகள்

Marriage Strike trending Ram Gopal Varma tweet over Divorce

People looking for online information on Divorce, Marriage Strike, MarriageStrike, Ram Gopal Varma, Ram Gopal Varma Tweet will find this news story useful.