”தளபதி 66 ஷூட்டிங்கில் சரத்குமாருடன் நானா?”… வைரல் photo-வுக்கு விளக்கமளித்த நடிகர் மனோபாலா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் மனோபாலா சரத்குமாருடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர அது இணையத்தில் வேகமாக பரவியது.

Actor manobala clarifying thalapathy 66 rumours

Also Read | அப்போ அரபிக் குத்து.. இப்போ ஆண்டவர் ஸ்டெப்… கலக்கும் அனிருத் .. வைரல் ரசிகர்கள் Reels!

தளபதி 66…

பீஸ்ட் திரைப்படத்துக்குப் பிறகு ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் இந்த படம் ஆக்ஷனுக்கு நிகராக குடும்ப செண்ட்டிமெண்ட் காட்சிகள் நிறைந்த படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. வம்சி இந்த படத்தை இயக்குகிறார்.

ஷூட்டிங்…

கடந்த மாதம் இந்த படத்தின் பூஜை சென்னையில் உள்ள தனியார் ஸ்டூடியோவில் நடைபெற்றது. இதில் இயக்குனர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜூ, ராஷ்மிகா மந்தனா, நடிகர் விஜய் கலந்து கொண்டனர். இந்த பூஜையில் நடிகர் சரத்குமாரும் கலந்து கொண்டுள்ளார். இந்த படத்தில் விஜய் உடன் முதல்முறையாக இணைந்து நடிக்க உள்ளார். இந்த படத்தில் எடிட்டராக பிரவீன் கே எல் இணைந்துள்ளார். விஜய்யின் பைரவா படத்தின் எடிட்டரும் இவர் தான். வமசியின் சில படங்களில் எடிட்டராகவும் பணியாற்றி உள்ளார். தமன் முதல் முறையாக விஜய் படத்துக்கு இசையமைக்கிறார்.  நடிகர் ஷாம் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Actor manobala clarifying thalapathy 66 rumours

Onboard…

சென்னையில் சில நாட்கள் படப்பிடிப்பு நடந்து நிறைவடைந்த நிலையில் தற்போது  இந்த படத்தின் படப்பிடிப்பு தெலுங்கானா மாநிலம் ஐத்ராபாத்தில் நேற்று  (04.05.2022) துவங்கி உள்ளது. இதற்காக விஜய் ஐதராபாத் சென்றுள்ளார். அங்கு விமான நிலையத்தில் விஜய் இருந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் பற்றிய on board தகவல்கள் ஒவ்வொன்றாக படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர். இதுவரை பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், ஜெயசுதா, பிரபு ஆகியோர் பெயர்களை அறிவித்துள்ளனர்.

Actor manobala clarifying thalapathy 66 rumours

வதந்தியும் விளக்கமும்…

இந்நிலையில் சமீபத்தில் நடிகர் மனோ பாலா, சரத்குமார் மற்றும் தயாரிப்பாளர், நடிகர் பி எல் தேனப்பன் ஆகியோரோடு இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்திருந்தார். உடனடியாக பலரும் அந்த புகைப்படம் தளபதி 66 படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்டது என நினைத்து பகிர ஆரம்பித்தனர். அதற்கு இப்போது நடிகர் மனோ பாலா விளக்கம் அளித்துள்ளார். அதில் ‘அந்த புகைப்படம் தளபதி 66 படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்டது என்பது தவறான செய்தி’ என விளக்கம் அளித்துள்ளார்.

Actor manobala clarifying thalapathy 66 rumours

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

தொடர்புடைய இணைப்புகள்

Actor manobala clarifying thalapathy 66 rumours

People looking for online information on Manobala, Manobala clarifying thalapathy 66 rumours, Thalapathy 66 Movie, Vijay will find this news story useful.