Jai been others
www.garudabazaar.com

ரச்சிதா விலகுகிறாரா? .. அவரே வெளியிட்ட பரப்ரப்பு Post.. அடுத்தடுத்து மாறும் சீரியல் நாயகிகள்?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவி சரவணன் மீனாட்சி தொடர் மூலமாக பிரபலமான ரச்சிதா, பின்னர் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீசன்-2 தொடரில் நடித்து வந்தார்.

is Rachitha vijay tv actress quits NINI serial viral post

இந்த சீரியலில் முன்னதாக சில எபிசோடுகளில் ரச்சிதாவை காண முடியாததால், அவர் சீரியலை விட்டு வெளியேறிவிட்டாரா? என்றெல்லாம் ரசிகர்கள் கேட்டு வந்தனர்.

அந்த சமயத்தில், தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போஸ்ட் பதிவிட்டிருந்த ரச்சிதா, “வதந்திகளை வைத்து அர்த்தம் புரிந்துகொள்ளாதீர்கள்.. இப்படி பேசி நீங்களே போக வெச்சிடுவீங்க போலயே?”.. என பதிலடி கொடுத்திருந்தார். மேலும் அந்த பதிவில்,  “சீரியல் தானா stop ஆச்சுனா பாத்துக்கலாம்.  போற வரைக்கும் போவோம்” என குறிப்பிட்டிருந்தார்.

இதனிடையே ஒரு கன்னட திரைப்படத்தில் நடிப்பதற்கு ரச்சிதா ஒப்பந்தமானார். அது தொடர்பான புகைப்படங்களும் வைரலாகி வந்தன. இந்நிலையில் நடிகை ரச்சிதா, ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில் இருந்து விலகுவதை குறிப்பிடுவதுபோல், ‘Bye மஹா’ என்று பதிவிட்டுள்ளார்.

இதேபோல் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து கண்ணம்மாவாக நடிக்கும் ரோஷினி ஹரிப்பிரியன் விலகுவதாகவும், அதற்குக் காரணம் அவருக்கு திரை வாய்ப்புகள் வருவதுதான் என கூறப்பட்டு வருகிறது. அத்துடன் இனி கண்ணம்மா கதாபாத்திரத்தில் வினுஷா என்பவர் நடிக்கவுள்ளதாக குறிப்பிட்டு அவருடைய புகைப்படம் பாரதியுடன் இணைக்கப்பட்டு ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

எனினும் இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக ரோஷினி, வினுஷா அல்லது டெலிவிஷன் தரப்பில் இருந்து அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

is Rachitha vijay tv actress quits NINI serial viral post

People looking for online information on Actress replaced, Bharathi kannamma promo, Bharathi Kannamma Serial Promo, Bharathi Kannamma Serial Today, Bharathi kannamma today episode, BharathiKannamma, Nam iruvar namaku iruvar, NINI, Rachitha Mahalakshmi, Vijay Television will find this news story useful.