www.garudabazaar.com

"செம்ம.. மாஸ்".. புதிய திரைப்படத்தில் நடிக்கும் விஜய் டிவி சீரியல் நடிகை.. Viral ஆகும் Shooting ஃபோட்டோஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவி மூலம் பல நடிகர்கள் திரைத்துறையில் அறிமுகமாகியுள்ளனர்.

vijay tv rachitha mahalakshmi acts in new movie update

குறிப்பாக விஜய் டிவி சீரியல்களில் இருந்தும், குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் இருந்தும் நடிகர்கள் புகழ், சிவாங்கி, தர்ஷா குப்தா, பவித்ரா என பலரும் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளனர்.

இதேபோல் விஜய் டிவி சீரியல் நடிகை ரச்சிதா மகாலட்சுமியும் புதிய படத்தில் நடிக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. அண்மையில் நாம் இருவர் நமக்கு இருவர்-2 சீரியலில் முக்கிய பெற்ற கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ள இவர், சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் தான் நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஒரு கன்னடப் படத்தில் நடிக்கும் செய்தி அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம், நடிகை ரச்சிதா மகாலட்சுமி, தான் நடித்து வரும் கன்னட திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து சில படங்களைப் பகிர்ந்திருக்கிறார். இந்த திரைப்படத்திற்கு 'ரங்கநாயக' என்று பெயரிடப்பட்டிருக்கிறது.

நடிகர் ஜக்கேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்தை குருபிரசாத் இயக்குகிறார்.

Also Read: "ஆனந்த கண்ணன் நிறைய பேர் கிட்ட உதவி கேட்டாரு".. கண் கலங்கிய பாடகர் ADK.. Video!

தொடர்புடைய இணைப்புகள்

vijay tv rachitha mahalakshmi acts in new movie update

People looking for online information on Rachitha Mahalakshmi, TV Actress, Vijay Television will find this news story useful.