லைகா ப்ரொடக்ஷன்ஸின் அடுத்த ப்ளான் என்ன தெரியுமா..? மாஸ் ஹீரோ..சூப்பர் டைரக்டர்.
முகப்பு > சினிமா செய்திகள்லைகா ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கவுள்ள அடுத்த படம் குறித்து தகவல் தெரியவந்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக தற்போது இருந்து வருகிறது லைகா ப்ரொடக்ஷன்ஸ். இந்நிறுவனம் தயாரித்த கத்தி, 2.0 உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது லைகா ப்ரொடக்ஷன்ஸ் பொன்னியின் செல்வன் மற்றும் இந்தியன்-2 ஆகிய படங்களை தயாரித்து வருகிறது. இதனிடையே லைகாவின் அடுத்த படம் குறித்து தகவல் தெரிய வந்துள்ளது.
லைகா ப்ரோடக்ஷன்ஸின் அடுத்த படத்தில் சசிகுமார் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இத்திரைப்படத்தை 'திருமணம் எனும் நிக்கா' படத்தை இயக்கிய அனீஸ் இயக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. படத்திற்கான அனைத்து பணிகளும் முடிவடையும் தருவாயில் இருப்பதாகவும், விரையில் படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.