RRR Others USA
www.garudabazaar.com

விஜய் சேதுபதியின் மாமனிதன் ரிலீஸில் மாற்றம்... ஆர்.கே.சுரேஷ் பரபரப்பு ட்வீட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் படத்தின் ரிலீஸ் மே 20 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அந்த படத்தை வெளியிடும் ஆர் கே சுரேஷ் அறிவித்துள்ளார்.

Vijay sethupathi maamanithan release postponed

சீனுராமசாமியும் விஜய் சேதுபதியும்…

இயக்குனர் சீனுராமசாமி இயக்கிய தென்மேற்குப் பருவக் காற்று திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் விஜய் சேதுபதி. இந்த படம் பரவலாக நல்ல விமர்சனங்களைப் பெற்றது. தென் மேற்குப் பருவக்காற்று திரைப்படத்துக்குப் பின்னர் இவர்கள் கூட்டணியில் இடம் பொருள் ஏவல், தர்மதுரை மற்றும் மாமனிதன் ஆகிய படங்கள் உருவாகியுள்ளன. இதில் இடம்பொருள் ஏவல் திரைப்படம் இன்னமும் ரிலீஸ் ஆகவில்லை. இதற்கடுத்து அவர்கள் கூட்டணியில் உருவான தர்மதுரை திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தை பிரபல தயாரிப்பாளராகவும் நடிகராகவும் அறியப்படும் ஆர் கே சுரேஷ் தயாரித்திருந்தார்.

Vijay sethupathi maamanithan release postponed

முதல் முறையாக யுவனோடு இணைந்த இளையராஜா

மாமனிதன் படத்துக்காக இளையராஜா மற்றும் அவரது மகன் யுவன் ஷங்கர் ஆகிய இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர். இருவரும் இணையும் முதல் படமாக மாமனிதன் அமைந்துள்ளது. இந்த கூட்டணிக்காக படத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

யுவன் தயாரிப்பில் மாமனிதன்…

தர்மதுரை வெற்றிக்குப் பிறகு சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, பேபி மானஸ்வி மற்றும் பலர் நடித்துள்ள படம் மாமனிதன். இந்த படத்துக்கு இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இணைந்து முதல் முறையாக இசையமைத்துள்ளனர். படத்துக்கு எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தமது YSR FILMS PVT LTD-ன் கீழ் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

இந்த படத்தின் டீசர் மற்றும் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்நிலையில் இந்த படத்தின் தமிழக மற்றும் கேரள திரையரங்க விநியோக உரிமையை தர்மதுரை தயாரிப்பாளர் ஆர் கே சுரேஷ் கைப்பற்றியுள்ளார்.  அதையடுத்து  மாமனிதன் திரைப்படம் மே 6 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்திருந்தார்.

Vijay sethupathi maamanithan release postponed

ரிலீஸ் தள்ளிவைப்பு

இந்நிலையில் இப்போது ஆர் கே சுரேஷ் பகிர்ந்துள்ள டிவீட்டில் மாமனிதன் திரைப்படம் மே 20 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவித்துள்ளர். மேலும் மே 6 ஆம் தேதி இயக்குனர் பாலா தயாரிப்பில் தான் நடித்துள்ள விசித்திரன் திரைப்படம் ரிலீஸ் ஆகும் எனவும் அறிவித்துள்ளார். விசித்திரன் திரைப்படம் மலையாளத்தில் வெளியாகி ஹிட்டான ஜோசப் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும். இந்த படத்தின் ரீமேக்கை மலையாளத்தில் இயக்கிய பத்மகுமாரே இயக்கியுள்ளார். ஜி வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

Vijay sethupathi maamanithan release postponed

தொடர்புடைய இணைப்புகள்

Vijay sethupathi maamanithan release postponed

People looking for online information on Maamanithan, R K Suresh, Seenu ramasamy, Vijay Sethupathi will find this news story useful.