Cadaver D Logo Top
Lal SIngh D Logo Top
Viruman Logo Top
www.garudabazaar.com

அடிபொலி..! லக்‌ஷ்மி ராமகிருஷ்ணனின் அடுத்த படத்துக்கு இசையமைக்கும் ‘மேஸ்ட்ரோ’ இளையராஜா.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தன் படத்திற்கு இளையராஜா இசையமைப்பது என்பது தனக்கு கிடைத்த பாக்கியம் என்று இயக்குநர் லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Ilaiyaraaja music for Lakshmi Ramakrishnan next film

நடிகை மற்றும் இயக்குநர் லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் தமது அடுத்த படத்துக்காக இசைனானி இளையராஜா இசையமைப்பது குறித்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமாக தெரிவித்துள்ளார். நடிகை மற்றும் இயக்குநர் லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் கடந்த 2008-ம் ஆண்டு வெளியான 'பிரிவோம் சந்திப்போம்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக பிரபலமானவர்.

இப்படி தமிழில் பாஸ் என்கிற பாஸ்கரன், நான் மகன் அல்ல, யுத்தம் செய் உள்ளிட்ட பல படங்களில் நடித்த இவர், 2012-ம் ஆண்டு வெளியான 'ஆரோகணம்' படத்தின் மூலம் இயக்குநரானார்.  இந்த திரைப்படத்தை அடுத்து 'நெருங்கி வா முத்தமிடாதே' (2014), 'அம்மணி' (2016) ஆகிய திரைப்படங்களை இயக்கினார். இதனை அடுத்தும் லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன், கடந்த 2019-ஆம் ஆண்டு இயக்கிய 'ஹவுஸ் ஓனர்' திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டைப் பெற்றதுடன், மத்திய அரசின் பனோரமா விருதினை பெற்றது.

இந்நிலையில் தற்போது சமுத்திரகனி, அபிராமி, மிஸ்கின், ரோபோ சங்கர் நடிப்பில் உருவாகும் புதிய படம் ஒன்றை லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கி வருகிறார். இந்த படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் , தான் இயக்கவிருக்கும் புதிய படம் குறித்து லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் பகிர்ந்துள்ளார்.

அதன்படி, தான் இயக்கவிருக்கும் புதிய படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்க இருப்பதாக தமது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ள இயக்குநர் லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன், “மேஸ்ட்ரோ இளையராஜா என் படத்துக்கு இசையமைப்பது என் பாக்கியம். அது என்ன ஒரு அனுபவமாக இருக்கும். இந்த படத்தின் ரீ-ரெக்கார்டிங் பணிகள் நடப்பதற்காக நான் ஆவலாக இருக்கிறேன்.. இறுதிக்கட்ட படப்பணிகள் நடந்து வருகின்றன” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Ilaiyaraaja music for Lakshmi Ramakrishnan next film

People looking for online information on Ilaiyaraaja, Lakshmi Ramakrishnan will find this news story useful.