www.garudabazaar.com

Ilaiya Nila : ‘இளைய நிலா’ பாடலில் பணிபுரிந்த முக்கிய இசைக்கலைஞர் மரணம்.. ஜேம்ஸ் வசந்தன் உருக்கம்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பயணங்கள் முடிவதில்லை திரைப்படத்தின் முக்கியமான பாடல் இளையநிலா பொழிகிறதே எனும் பாடல். இந்த பாடலில் பணியாற்றிய பிரபல இசை கலைஞர் தற்போது மரணம் அடைந்திருக்கிறார்.

Ilaiya Nila Guitar Player Chandrasekar Passed away

Also Read | விஜய் பாடுனா இந்த பிரபல பாடகரின் குரல் அப்படியே இருக்குமா..? யார் அவரு ? - ஷோபா EXCLUSIVE

1982 ஆம் ஆண்டு கோவைத்தம்பி கதை எழுத, ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில் மோகன், பூர்ணிமா ஜெயராம், பூர்ணம் விஸ்வநாதன், ராஜேஷ், எஸ்.வி.சேகர் மற்றும் பலர் நடித்த பயணங்கள் முடிவதில்லை திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் அனைத்து பாடல்களுமே இளையராஜா இசையில் ஹிட் அடித்தன.

பிரபல ஹிட் குத்து பாடலான ஏ ஆத்தா ஆத்தோரமா வரியா பாடல் இந்த திரைப்படத்தில்தான் இடம் பெற்றது. இதேபோல் மணி ஓசை கேட்டு எழுந்து, தோகை இளமயில், வைகறையில் வைகைக் கரையில், சாலையோரம் சோலையொன்று உள்ளிட்ட பாடல்கள் இந்த திரைப்படத்தில் அமைந்தன. இந்த பாடல்கள் அனைத்துமே ஹிட் ஆகின.

இதில் இளைய நிலா எனும் பாடல் மிகவும் பிரபலம். இளையராஜா ரசிகர்களின் பிளே லிஸ்டில் இந்த பாடல் முதன்மையான இடத்தில் இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இந்த பாடலில் கிட்டார் இசையின் பங்களிப்பு அதிகமாக இருக்கும். நாயகன் கிடார் இசைத்துக் கொண்டே பாடும் இந்த பாடலில் கிட்டார் வாசித்தவர்தான் சந்திரசேகர். இவர் தற்போது மரணம் அடைந்திருக்கிறார். இவருடைய மரணம் குறித்த தகவலை பகிர்ந்திருக்கும் பிரபல இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், சந்திரசேகரின் மரணத்துக்கு தம்முடைய இரங்கலையும் தெரிவித்து இருக்கிறார்.

Also Read | Vetrimaaran : "நடிகர்களையே தலைவானு கூப்ட வேணாம்.. அப்ப இயக்குநர்களை..".. Viduthalai இசைவிழாவில் வெற்றிமாறன்.!

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Ilaiya Nila Guitar Player Chandrasekar Passed away

People looking for online information on Chandrasekar, Ilaiya Nila, Ilaiyanila, Ilaiyaraaja will find this news story useful.