www.garudabazaar.com

"விடுதலை பட ரயில் செட்டுக்கு மட்டும் இம்புட்டு கோடி செலவு".. வெற்றிமாறன் பகிர்ந்த தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விடுதலை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் வெற்றிமாறன் ரயில் செட் பட்ஜெட் குறித்து பேசியுள்ளார்.

Vetrimaran speech about Viduthalai Movie Train Set cost

Images are subject to © copyright to their respective owners.

Also Read | வாடிவாசல்.. வடசென்னை - 2 எப்போ? வெற்றிமாறன் கொடுத்த சூப்பர் அப்டேட்! FANS HAPPY அண்ணாச்சி

ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பாளர் எல்ட்ரெட் குமாரின் தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி  நடிக்கும் ‘விடுதலை’ திரைப்படம் இரண்டு வெவ்வேறு பாகங்களாக உருவாகி வருகிறது.

விடுதலை படத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் விடுதலை படத்திற்கு மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.

Vetrimaran speech about Viduthalai Movie Train Set cost

Images are subject to © copyright to their respective owners.

இந்த விடுதலை படத்தில் ஜெயமோகன் எழுத்தாளராக பணிபுரிகிறார். மேலும் ஜெயமோகன் எழுதிய துணைவன் சிறுகதையை அடிப்படையில் தான் வெற்றிமாறன் இந்த விடுதலை படத்தினை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார்.

தற்போது விடுதலை படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

விடுதலை முதல் பாகத்தின் டிரெய்லர் & இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். படத்தின் டிரெய்லரும் அப்போது வெளியிடப்பட்டது.

Vetrimaran speech about Viduthalai Movie Train Set cost

Images are subject to © copyright to their respective owners.

இந்த நிகழ்வில் பேசிய இயக்குனர் வெற்றிமாறன், "தயாரிப்பாளர் எல்ரெட் குமாருக்கு நன்றி. முதலில் அவரிடம் கதை சொல்லும் போது ஒரு ரயில் விபத்து காட்சிகள் குறித்து கூறியிருந்தேன். அதன்பிறகு பட்ஜெட் காரணங்களால் அதை விட்டுவிட்டேன். ஆனால் எல்ரெட் குமார் அந்த ரயில் காட்சிகள் குறித்தே கேட்டுக் கொண்டு இருந்தார்.

Vetrimaran speech about Viduthalai Movie Train Set cost

Images are subject to © copyright to their respective owners.

ஜாக்கிட்ட சொன்னா அவர் பெரிய பில்லை கொடுத்தார். அந்த ரயில் செட் போட மட்டும் 2 கோடி ரூபாய் 50 லட்சம் ஆச்சு. அந்த ரயில் காட்சிகளை எடுத்து முடிக்கும் போது மட்டும் முன்ன சொன்ன பட்ஜெட்டை (4 கோடி ரூபாய்) விட இரண்டு மடங்கு அதிகமாக ஆயிடுச்சு" என வெற்றிமாறன் பேசினார்.

Also Read | "விடுதலை படத்துக்கு முதல்ல போட்ட பட்ஜெட் இத்தனை கோடி ரூபாய் தான்".. மனம் திறந்த வெற்றிமாறன்!

"விடுதலை பட ரயில் செட்டுக்கு மட்டும் இம்புட்டு கோடி செலவு".. வெற்றிமாறன் பகிர்ந்த தகவல்! வீடியோ

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Vetrimaran speech about Viduthalai Movie Train Set cost

People looking for online information on Soori, Vetrimaaran, Viduthalai, Vijay Sethupathi will find this news story useful.