ஹிப்ஹாப் ஆதியின் சிரிப்பு வெடி பாடல் இதோ! பக்கா புள்ளிங்கோ மெட்டிரியல்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஹிப்ஹாப் ஆதி நடித்துள்ள நான் சிரித்தால் படத்தில் இருந்து நான் சிரிச்சா பாடல் வெளியாகியுள்ளது.

hiphop adhi's naan siricha from naan sirithal is out

மீசைய முறுக்கு படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் கதாநாயகன் அவதாரம் எடுத்தார் ஹிப்ஹாப் ஆதி. இதையடுத்து இவர் நடித்த நட்பே துணை படமும் ரசிகர்களை கவர்ந்தது. இதை தொடர்ந்து ஆதி நடிக்கும் படம் நான் சிரித்தால். அறிமுக இயக்குநர் ரானா இப்படத்தை இயக்குகிறார். முழுக்க முழுக்க காமெடி ஜானரில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது. ஐஷ்வர்யா மேனன் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க, கே.எஸ்.ரவிகுமார், ரவி மரியா, முனிஸ்காந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் நான் சிரித்தால் படத்தில் இருந்து நான் சிரிச்சா எனும் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இளைஞர்களை கவரும் வகையில் இப்பாடலை ஆதி எழுதியுள்ளார். சுந்தர்.சி தயாரித்துள்ள இத்திரைப்படம் வரும் பிப்ரவரி 14 அன்று வெளியாகவுள்ளது.

ஹிப்ஹாப் ஆதியின் சிரிப்பு வெடி பாடல் இதோ! பக்கா புள்ளிங்கோ மெட்டிரியல். வீடியோ

Entertainment sub editor