www.garudabazaar.com

துல்கர் சல்மானின் "ஹே சினாமிகா" அடுத்த அப்டேட்டுக்கு தயாராகும் ரசிகர்கள் !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Hey Sinamika படத்தின் புது  first look இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்போவதாக தகவல் வெளிவந்துள்ளது.

 

Hey Sinamika new first look poster to be released today evening.

"செகண்ட் ஷோ" என்ற மலையாள படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் துல்கர் சல்மான். வாயை மூடி பேசவும் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். ஆனால் "ஓ காதல் கண்மணி" என்ற படத்தின் மூலம் பல ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார்.  இந்த படத்தில் துல்கர் சல்மான், நித்யா மேனன், பிரகாஷ்ராஜ் மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படத்தை எழுதி, இயக்கி, தயாரித்தவர் மணி ரத்னம். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க இப்படத்தின்  பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது. இதை தொடர்ந்து மலையாளத்தில் கவனம் செலுத்தி வந்த துல்கர் சல்மான், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார்.

Hey Sinamika new first look poster to be released today evening.

இவரது நடிப்பில் வெளிவந்த குருப் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. நல்ல வசூல் சாதனை படைத்தும் குறிப்பிடத்தக்கது. தற்போது தமிழில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகிவரும் படம் 'ஹே சினாமிகா'. இப்படத்தை நடன இயக்குனர் பிருந்தா இயக்குகிறார்.இப்படத்தின் மூலம் பிருந்தா இயக்குனராக அறிமுகமாகிறார்.  இப்படத்தில் துல்கர் சல்மானுடன் காஜல் அகர்வால், அதிதி ராவ் ஹைத்ரி ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

Hey Sinamika new first look poster to be released today evening.

இப்படத்தின் முதல் லுக் போஸ்டரை சூர்யா ஜோதிகா, நஸ்ரியா பகத் பாசில், ராணா டகுபடி ஆகியோர் வெளியிட்டனர். ரசிகர்களுக்கு இப்படத்தின் மீது உள்ள ஆர்வம் அதிகரித்த நிலையில், இப்படத்திற்கான புது First Look இன்று மாலை 6 மணிக்கு நடிகர் ஆர்யா- சாயீஷா  மற்றும் நடிகர் ஜெயம் ரவி-ஆர்த்தி ரவி வெளியிடுகின்றனர். இப்படம் பிப்ரவரி 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் செய்திகள்

Hey Sinamika new first look poster to be released today evening.

People looking for online information on Brindha, DulquerSalmaan, Firstlook, Ohsinamika will find this news story useful.