Veetla Vishesham Others Page USA

மிதாலி ராஜின் BIO PIC படம்.. டாப்சி நடிப்பில் வெளியான தெறிக்கும் டிரெய்லர்! பட ரிலீஸ் எப்போ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

டாப்ஸி நடிக்கும் 'சபாஷ் மிது' படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

Here is the trailer of Taapsee starrer Shabaash Mithu

Also Read | திருமணத்துக்கு பின் விக்கி - நயன் முதல் வெளிநாட்டு பயணம்.. எந்த நாட்டுக்கு போயிருக்காங்க?

டாப்ஸி பன்னுவின்  நடிப்பில், சபாஷ் மிது திரைப்படம், இந்தியாவில் கிரிக்கெட்டை மாற்றியமைத்த இந்திய பெண்கள் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் டாப்ஸி பண்ணு டைட்டில் ரோலில் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் திறமை மிகு  நடிகரான விஜய் ராஸ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். 2022 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான சபாஷ் மிது திரைப்பட டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டது.

Here is the trailer of Taapsee starrer Shabaash Mithu

2022 ஐசிசி மகளிர் உலகக் கோப்பையில் இந்திய பெண்கள் அணியின் கேப்டனாக பல உலக சாதனைகளை முறியடித்து சமீபத்தில் ஓய்வு பெற்ற இந்திய பெண்கள் அணியின் முன்னாள் கேப்டனான மிதாலி ராஜின் வாழ்க்கையை இப்படம் விவரிக்க உள்ளது. மிதாலியின் வாழ்க்கையில் நடந்த உயர்வு மற்றும் தாழ்வுகள்,பின்னடைவுகள் மற்றும்  மகிழ்ச்சியான தருணங்களை டிரெய்லர் அழகாக விவரிக்கிறது.

Here is the trailer of Taapsee starrer Shabaash Mithu

இப்படத்தை Viacom18 Studios தயாரித்துள்ளனர், சபாஷ் மிதுவின் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக அஜித் அந்தாரே பணியாற்ற,  ஸ்ரீஜித் முகர்ஜி இப்படத்தை இயக்கியுள்ளார் மற்றும் ப்ரியா அவென் இப்படத்தினை எழுதியுள்ளார். இப்படம் ஜூலை 15 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாக உள்ளது.

Also Read | "இனி இதயத்தில் இருந்து பேசும் முன் 2 முறை யோசிப்பேன்" சர்ச்சைக்கு சாய் பல்லவி விளக்கம்

மிதாலி ராஜின் BIO PIC படம்.. டாப்சி நடிப்பில் வெளியான தெறிக்கும் டிரெய்லர்! பட ரிலீஸ் எப்போ? வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Here is the trailer of Taapsee starrer Shabaash Mithu

People looking for online information on சபாஷ் மிது, டாப்ஸி, Mithali Raj, Shabaash Mithu, Taapsee, Trailer of Taapsee Shabaash Mithu will find this news story useful.