www.garudabazaar.com

சூப்பரோ சூப்பர்: விஜய் சேதுபதி நடிக்கும் அனபெல் சேதுபதி படத்தின் டெரர் ஆன டிரெய்லர்!!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அனபெல் சேதுபதி படத்தின் இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன், இவர் இயக்குனர்-நடிகர் ஆர். சுந்தர்ராஜனின் மகனாவார். இயக்குனர் A.L. விஜய்யிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர், தீபக் சுந்தர்ராஜன்.

taapsee's Annabelle Sethupathi movie trailer released

இவர் இயக்கத்தில், விஜய் சேதுபதி, டாப்ஸி பானு நடித்துள்ள 'அனபெல் சேதுபதி' படத்தின் முதல் லுக் போஸ்டர் சில தினங்களுக்கு முன் வெளியானது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, டாப்ஸியுடன் ஜெகபதி பாபு மற்றும் நடிகை ராதிகா சரத்குமார், யோகிபாபு, தேவ தர்ஷினி, சுப்பு பஞ்சு ஆகியோரும் நடித்துள்ளனர்.

taapsee's Annabelle Sethupathi movie trailer released

இந்நிலையில் அனபெல் சேதுபதி படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகி உள்ளது. இதனை மலையாளத்தில் மோகன்லாலும், தெலுங்கில் வெங்கடேசும், தமிழில் சூர்யாவும் வெளியிட்டனர். காமெடி ஹாரர் வகைமையில் இந்த படம் உருவாகி உள்ளது. இரண்டு வெவ்வேறு காலகட்டத்தில் கதை நடப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. சேதுபதி மன்னராக விஜய் சேதுபதி இதில் நடித்துள்ளார், சேதுபதியின் காதலியாக அனபெல் கதாபாத்திரத்தில் நடிகை டாப்ஸி நடித்துள்ளார்.

taapsee's Annabelle Sethupathi movie trailer released

இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 17 ஆம் தேதி முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் விஐபியில் ஒளிபரப்பாகிறது.

சூப்பரோ சூப்பர்: விஜய் சேதுபதி நடிக்கும் அனபெல் சேதுபதி படத்தின் டெரர் ஆன டிரெய்லர்!!! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

taapsee's Annabelle Sethupathi movie trailer released

People looking for online information on Tapsee pannu, Vijay Sethupathi will find this news story useful.