Veetla Vishesham Others Page USA

“என்ன மிமிக்ரியா…?”… தனுஷ் வெளியிட்ட ஜாலியான ‘திருச்சிற்றம்பலம்’ Glimpse… தந்தையர் தின ஸ்பெஷல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திருச்சிற்றம்பலம் திரைப்படம் ஆகஸ்ட் 18 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.

Dhanush shared fathers day special glimpse from thiruchitrambalam

திருச்சிற்றம்பலம்…

நடிகர் தனுஷ் தனது 44 வது படமாக சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவும், நடிகர் பிரகாஷ் ராஜூம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். மேலும் தனுசுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராக்ஷி கண்ணா ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடந்து முடிந்தது. பாண்டிச்சேரி, சென்னை, புதுக்கோட்டை, குற்றாலம் போன்ற இடங்களில் படப்பிடிப்பை படக்குழு நடத்தினர்.

அனிருத் – தனுஷ் கூட்டணி…

இந்த படத்திற்கான கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை தனுஷே எழுதியுள்ளார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். சில வருட இடைவெளுக்குப் பின் தனுஷ் அனிருத் கூட்டணி இந்த படத்தின் மூலம்  மீண்டும் கைகோர்த்துள்ளது. ஆரம்பம், அனேகன், வாகை சூடவா பட ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். பிரசன்னா படத்தொகுப்பு செய்கிறார். திருச்சிற்றம்பலம் படத்தில்   திருச்சிற்றம்பலம் எனும் டெலிவரி பாய் கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கிறார். இப்படம் வருகிற ஆகஸ்ட் 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த ரிலீஸ் தேதியை புதிய போஸ்டருடன் தனுஷ் டிவிட்டரில் அறிவித்துள்ளார்.

Dhanush shared fathers day special glimpse from thiruchitrambalam

தந்தையர் தின ஸ்பெஷல்…

சமீபத்தில் இந்த படத்தின் கதாபாத்திர அறிமுக போஸ்டர்கள் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றன. மேலும் படத்தின் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 18 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று தந்தையர் தினத்தை முன்னிட்டு படத்தில் பாரதிராஜா மற்றும் தனுஷ் இடம்பெறும் ஜாலியான காட்சி ஒன்றை இப்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அந்த glimpse வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush shared fathers day special glimpse from thiruchitrambalam

People looking for online information on Bharathiraaja, Dhanush, Thiruchitrambalam will find this news story useful.