www.garudabazaar.com

கேரள திரைப்பட விருதுகள் அறிவிப்பு.. விருது வென்ற நட்சத்திரங்கள் யார் யார் தெரியுமா.?!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

2019-ஆம் வருடத்திற்கான கேரள திரைப்பட விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. 

கேரள திரைப்பட விருதுகள் | here is the list of kerala state awards for 2019 films

கேரள சினிமாவிற்கு எப்போதுமே தனி ரசிகர்கள் உள்ளனர். யதார்த்தமான வாழ்வியில் பேசும் சினிமாவிற்கு பெயர் போனது கேரள திரைத்துறை. தனது வித்தியாசமான கதைகளாலும், ஃபிலிம் மேக்கிங்காலும், தொடர்ந்து சினிமா ரசிகர்களை கவர்ந்து வருகின்றன கேரள சினிமாக்கள். 

கேரள திரைப்பட விருதுகள் | here is the list of kerala state awards for 2019 films

இந்நிலையில் 2019-ஆம் வருடத்திற்கான கேரள அரசின் விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சிறந்த படமாக வசந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த இயக்குநருக்கான விருது ஜல்லிகட்டு திரைப்படத்தை இயக்கிய லிஜோ ஜோஸ்க்கும் சிறந்த நடிகருக்கான விருது, ஆன்ட்ராயிட் குஞ்சப்பன் படத்தில் நடித்த சூரஜ் வெஞ்சரமூடுவுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கும்பலங்கி நைட்ஸ் திரைப்படத்திற்காக ஃபஹத் ஃபாசிலுக்கு சிறந்த குணச்சித்திர நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. 

விருது வென்ற மற்ற நட்சத்திரங்களின் விவரம் : சிறந்த நடிகை - கனி குஸ்ருதி (பிரியாணி), சிறந்த குணச்சித்திர நடிகை - ஸ்வாசிகா (வசந்தி), சிறந்த திரைப்படம் ( மக்களிடையே பிரபலம்) - கும்பலங்கி நைட்ஸ், சிறந்த குழந்தைகள் திரைப்படம் - நானி, சிறந்த திரைக்கதை - ரஹ்மான் பிரதர்ஸ் (வசந்தி), சிறந்த திரக்கதை தழுவல் - பி.எஸ் ரஃபிக் (தொட்டப்பன்), சிறந்த குழந்தை நட்சத்திரம் (ஆண்) - வசுதேவ் சஜீஷ் மாறா (சுலு), சிறந்த குழந்தை நட்சத்திரம் (பெண்) - கேத்ரீன் விஜி (நானி), சிறந்த அறிமுக இயக்குநர் - ரதீஷ் பாலகிருஷ்ணன் பொடுவல் (ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன்), சிறந்த இசையமைப்பாளர் - சுஜின் ஷ்யாம் (கும்பலங்கி நைட்ஸ்), சிறந்த பாடகர் - நஜிம் அர்ஷத், சிறந்த பாடகி - மதுஶ்ரீ நாராயணன், சிறந்த பின்னணி இசை - அஜ்மல் ஹஸ்புல்லா, சிறந்த எடிட்டர் - கிரண் தாஸ் (இஷ்க்), சிறந்த ஒளிப்பதிவாளர் - பிரதாப் வி நாயர் (கெஞ்சிரா), சிறந்த ஒலிச்சேர்க்கை - ஶ்ரீசங்கர் கோபிநாத் மற்றும் விஷ்ணு கோவிந்த் (உண்ட - இஷ்க்), சிறந்த சவுன்ட் மிக்சிங் - கன்னடன் (ஜல்லிக்கட்டு), சிறந்த நடனம் - பிருந்தா - பிரசன்னா சுஜித் (மரக்கர்), சிறந்த டப்பிங் (ஆண்) - வினீத் (லுசிஃபர்), சிறந்த டப்பிங் (பெண்) - ஷ்ருதி ராமச்சந்திரன் (கமலா), சிறந்த மேக்கப் - ரஞ்சித் அம்பாடி (ஹெலன்), சிறந்த காஸ்ட்யூம் - அஷோகன் ஆலப்புழா (கெஞ்சிரா), சிறந்த ஆர்ட் டைரக்‌ஷன் - ஜ்யோதிஷ் சங்கர், ஸ்பெஷல் ஜூரி - அன்னா பென் (ஹெலன்), நிவின் பாலி (மூத்தோன்).

 

தொடர்புடைய இணைப்புகள்

கேரள திரைப்பட விருதுகள் | here is the list of kerala state awards for 2019 films

People looking for online information on Fahad Fazil, Jallikattu, Kerala State Awards, Kumbalangi Nights, Lijo Jose Pellissery, Suraj Venjaramoodu will find this news story useful.