www.garudabazaar.com

Official : விஷால் படத்தில் இணையும் இன்னொரு பிரபல ஹீரோ..!! - இயக்குநர் சொன்ன செம தகவல்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஷால் நடிக்கும் புதிய திரைப்படம் குறித்து செம தகவல் தற்போது கிடைத்துள்ளது. 

விஷாலுடன் இணையும் ஆர்யா | Vishal to join with this popular hero in anand shankar film

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இவர் நடித்த பல திரைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட் அடித்தன. இவர் தற்போது சக்ரா திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் துப்பறிவாளன்-2 படத்தை இயக்கி நடித்து வருகிறார். இதை தொடர்ந்து விஷால் அடுத்ததாக, அரிமா நம்பி, இருமுகன், நோட்டா உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். 

விஷாலுடன் இணையும் ஆர்யா | Vishal to join with this popular hero in anand shankar film

இந்நிலையில் விஷாலின் 30-வது திரைப்படம் குறித்த செம தகவலை இயக்குநர் ஆனந்த் சங்கர் ட்விட்டரில் கொடுத்துள்ளார். இத்திரைப்படத்தில் நடிகர் ஆர்யாவும் இணையவுள்ளதாக அவர் பதிவிட்டுள்ளார். ஆர்யாவுக்கு இது 32-வது படமாம். மற்ற நடிகர்கள் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. விஷால் மற்றும் ஆர்யா இதற்கு முன்னர் பாலா இயக்கிய அவன் இவன் திரைப்படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது. 

 

தொடர்புடைய இணைப்புகள்

விஷாலுடன் இணையும் ஆர்யா | Vishal to join with this popular hero in anand shankar film

People looking for online information on Aanand Shankar, Arya, Arya 32, Vishal, Vishal 30 will find this news story useful.