எப்படி சாதிக்கிறோம்ங்கிறது தான் மாஸு - சூப்பர் ஸ்டார் குறித்து பிரபல சிஎஸ்கே வீரர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், கடந்த வருட ஐபிஎல் போட்டிகளில் சிஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார். இதன் காரணமாக தனது ட்விட்டர் பக்கத்தில் அடிக்கடி தமிழில் பதிவிட்டு வருகிறார்.

Harbhajan singh tweets about Rajinikatnh and Sachin Tendulkar

தமிழ் படங்களில் வரும் பஞ்ச் டயலாக்குகள் ஸ்டைலில் அவர் இடும் பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் ரஜினிகாந்த் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

அதில், ''வாழ்க்கையின் தொடக்கம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் இரெண்டு ஸ்டம்புகளுக்கு நடுவில் இருக்கலாம் அல்லது ஒரு பேருந்தின் இரண்டு படிக்கட்டுகளுக்கு நடுவிலும் இருக்கலாம். எங்க தொடங்குறோம்ன்றதுல இல்ல மாஸு, எப்படி சாதிக்கிறோம்ங்கிறது தான் மாஸ்" என்று குறிப்பிட்டுள்ளார்.

'பேட்ட' படத்தின் வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய விருக்கின்றனர்.