www.garudabazaar.com

"2 பேரும் யார்னு கெஸ் பண்ணுங்க".. அனிருத்தின் அடுத்த ஆல்பம் சாங்.. அவரே பதிவிட்ட செம ட்வீட்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை, 06 பிப்ரவரி 2022:- பல முன்னணி நடிகர்களின் முன்னணி திரைப்படங்களில் இசையமைத்து வருபவர் ராக் ஸ்டார் அனிருத்.

Anirudh Ravichander swipe right material album song update

அனிருத் இசையிலான படங்கள்..

தளபதி விஜய் நடிப்பில் உருவாகும் பீஸ்ட், சிவகார்த்திகேயன் நடிப்பிலான டான் என பல படங்களில் இசையமைக்கும் அனிருத்திடம் இருந்து, பல நடிகர்களின் ரசிகர்கள் புதிய அப்டேட்களை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இளம் இசையமைப்பாளர் அனிருத், தனது ட்விட்டர் பக்கத்தில் புதிதாக ஒரு ட்வீட்டினை பதிவு செய்துள்ளார்.

அனிருத் ட்வீட்

பல ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டும் வகையில் இருந்த அந்த அப்டேட் என்னவாக இருக்கும் என மிகவும் ஆர்வத்துடன் பார்க்கையில், இசையமைப்பாளர் அனிருத், தமது ஆல்பம் பாடல் குறித்த செம்ம அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆம், அனிருத்திடம் இருந்து அடுத்த சம்பவமாக வரவிருக்கும் ஆல்பம் பற்றிய அனல் பறக்கும் அப்டேட்டை அவரே அறிவித்துள்ளார். அதில், அனிருத்தின் அருகருகே நிற்கும் இவரது நிழல் உருவத்துடன், அவர்கள் யார் என்று கெஸ் பண்ண சொல்லி ஒரு போஸ்டர் ஒன்றை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டுள்ளார்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

இதனை பார்த்த பல ரசிகர்கள், கமெண்ட் பாக்ஸில் "அடுத்த படத்தின் பாடல் என்ன என்று, சொல்லுங்க ப்ரோ" என பல கமெண்டுகளை அடுத்தடுத்து பதிவிட்டு கேட்டு வருகின்றனர். ஏற்கனவே அனிருத் பல ஆல்பம் பாடல்களை வெளியிட்டுள்ள நிலையில், லேட்டஸ்டாக அனிருத்தும் அறிவும் சேர்ந்து கொரோனா விழிப்புணர்வு குறித்த பாடல் ஒன்றையும் வெளியிட்டிருந்தனர்.

அனிருத் ஆல்பம்

தற்போது இந்த ஆல்பம் சாங் பற்றிய முன்னறிவிப்பு பல ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டும் வகையில் அமைந்துள்ளது.  குறிப்பிட்ட ஒரு பிராண்டுக்காக இந்த பாடல் உருவாவதாக அனிருத் தெரிவித்திருந்த நிலையில், அந்தப் பாடலில் அனிருத் ரவிச்சந்தர், குரு ரந்தவா, தீ MC, கார்த்திக் ஷா ஆகியோர் இணைந்து பணியாற்றியிருப்பதாக ரசிகர்கள் சிலர் கமெண்டுகளில் தெரிவித்து வருகின்றனர்.

swipe right material

ஆம், டிண்டர் ஆப்பிற்காக "swipe right material" என்கிற பெயரில் உருவாகியிருக்கும் இந்த பாடலின் அப்டேட் தான் இது என்றும், அனிருத் பாடியுள்ள இந்த பாடல் ஸ்பாட்டிஃபையில் ஏற்கனவே ஸ்ட்ரீம் ஆவதாகவும் போஸ்டருடன் ரசிகர்கள் அதே கமெண்டில் பதிலாக பகிர்ந்து வருகின்றனர்.

Also Read: அபினய் கொடுத்த ‘மகா’ பட்டம்.. அழுத தாமரை.. "சாவித்ரி கொடுத்ததா நினைச்சுக்க தாமரை" - அசராமல் அடித்த தலைவி வனிதா.. பிக்பாஸ் வீட்டில் ஒரு முஸ்ஃபா முஸ்ஃபா  மொமண்ட்..

Anirudh Ravichander swipe right material album song update

People looking for online information on Anirudh Ravichander, Swipe for right material, Swipe for right material spotify, Tinder will find this news story useful.