www.garudabazaar.com

ரவுடி பேபியாகும் முன்னணி தமிழ் நடிகை! கவிஞர் வைரமுத்து வெளியிட்ட அசத்தலான அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி பாடலாசிரியரான  வைரமுத்து இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.

Rowdy Baby New Film With The heroine is Actress Hansika Motwani

இந்த புதிய படத்தை தயாரிப்பாளர் ரமேஷ் பிள்ளை அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக தயாரிக்கிறார். சாம் சி‌எஸ் இசையமைக்கிறார், கவிப்பேரரசு வைரமுத்து பாடல் வரிகளை எழுதுகிறார். பி செல்லதுரை ஒளிப்பதிவு செய்ய ராஜ சரவணன் இந்த படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது. இந்த படத்தின் படப்பிடிப்பை கவிப்பேரரசு வைரமுத்து தொடங்கிவைத்தார். 

Rowdy Baby New Film With The heroine is Actress Hansika Motwani

இந்த படத்திற்கு ரவுடி பேபி என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை ஹன்சிகா மோத்வானி நடிக்கிறார். ஹன்சிகா தற்போது சிம்புவுடன் மகா படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார். இதுபோக பார்ட்னர் படமும் தயாராகி வருகிறது.

Rowdy Baby New Film With The heroine is Actress Hansika Motwani

ரவுடி பேபி எனும் படத் தலைப்பு தனுஷ் சாய் பல்லவி நடிப்பில் வெளியான மாரி 2 படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. மாரி 2 படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Rowdy Baby New Film With The heroine is Actress Hansika Motwani

தொடர்புடைய இணைப்புகள்

Rowdy Baby New Film With The heroine is Actress Hansika Motwani

People looking for online information on Hansika Motwani, Rowdy Baby, Vairamuthu will find this news story useful.