www.garudabazaar.com

‘6 நாள் ஷூட்’... ‘ஒரே ஒரு ஷாட் தான்’.. Hansika-வின் தெறிக்கவிடும் திரில்லர் படம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ஹன்ஷிகா மோத்வானி நடிப்பில் One not Five Minutes திரைப்படம் அறிவிப்பு வெளியான சமயத்தில் இருந்தே, ரசிகரிளிடம் எதிர்பார்ப்பை அதிகரித்து வரும் ஒரு படமாக இருந்து வருகிறது.

Hansika Motwani One not Five Minutes ஹன்சிகாவின் ஒரே ஷாட் படம்

இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்த நிலையில் ரசிகர்களை ஈர்க்கும் பொருட்டு,  இப்படத்தினை உலகிலுள்ள பல நாடுகளின் பல்வேறு மொழிகளில் வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இப்படத்தினை தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகள் அல்லாமல் சைனீஸ், கொரியன் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்திய திரையின் மொத்த வரலாற்றில், மூன்றாவது முறையாக,  ஒரே ஒரு கதா பாத்திரத்தை மட்டும் மையமாக வைத்து உருவாகும் படம் எனும் சிறப்பை, இப்படம் பெற்றுள்ளது.

இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் 15 நாள் ரிகர்சலுக்கு பிறகு,  வெறும் 6 நாட்களில் படமாக்கப்பட்டது. படத்தில் மொத்தமாக 5-லிருந்து 6 சீக்குவன்ஸ் காட்சிகளே உள்ளன. ஒவ்வொரு காட்சியும் திரையில்  20 நிமிடங்கள் வரை வரும்படி அமைக்கப்பட்டுள்ளது. இது போல் பல்வேறு சிறப்பு தன்மைகளை பெற்ற ஒரு புதுவித அனுபவத்தை தரும் வகையில் இப்படம் உருவாகி வருகிறது.

One not Five Minutes திரைப்படத்தில் வரும் கதையும் 105 நிமிடத்தில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் நீளமும் அதே தான். உலகின் பல்வேறு திரைப்பட விழாக்களில் இப்படத்தினை வெளியிடவும் உள்ளனர்.  மேலும் இப்படத்தில் குறிப்பிடதக்க மற்றொரு அம்சம் என்னவெனில், ஒரு கதா பாத்திரத்தினை கொண்டு, முழுப்படமும் ஒரே ஷாட்டில் வரும்படியான முதல்படமாக இப்படம்  படமாக்கப்பட்டுள்ளது.

One not Five Minutes படத்தினை Bommak Shiva மற்றும் Rudransh Celluloid இணைந்து தயாரித்துள்ளனர். Raja Dussa இப்படத்தினை இயக்கியுள்ளார். சாம் CS இசையமைக்க Kishore Boyipadu ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Also Read: “Wow.. ஸ்லிம் ஆய்ட்டீங்களே!”.. Propose-ஏ பண்ணிவிட்ட ரசிகர்.. குஷ்புவின் செம வைரல் பதில்!

Hansika Motwani One not Five Minutes ஹன்சிகாவின் ஒரே ஷாட் படம்

People looking for online information on Hansika Motwani, One not Five Minutes will find this news story useful.