"புது வருஷம் பொறந்து இருக்கு".. ரசிகர்களுக்கு தனது பாணியில் அட்வைஸ் கொடுத்த ஹன்சிகா!
முகப்பு > சினிமா செய்திகள்சென்னை : புத்தாண்டையொட்டி தனது ரசிகர்களுக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார் நடிகை ஹன்சிகா மோத்வானி.

சின்ன குஷ்பு என்று ரசிகர்களால் ஆசையாக அழைக்கப்படும் நடிகை தான் ஹன்சிகா. ரசிகர்களின் செல்ல நாயகியாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை ஹன்சிகா, இப்பொழுது ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு வொர்க் அவுட் செய்து, ஸ்லிம் அண்ட் பிட்டாக தனது தோற்றத்தையே மாற்றி உள்ளார். அட! இது நம்ம ஹன்சிகாவா என்று கேட்கும் அளவிற்கு தன் உடல் எடையை கணிசமாக குறைத்துள்ளார். குழந்தை போல சிரிப்பும், எதார்த்தமான நடிப்பால் பல ரசிகர்களை தன் கைவசம் வைத்துள்ளார்.
நடிகை ஹன்ஷிகா சினிமாவில் அர்ப்பணிப்பை தாண்டி, அவரது அன்பான நல்ல உள்ளத்திற்காக திரைத்துறையில் அனைவராலும் கொண்டாடப்படும் ஒரு நபராக விளங்குகிறார்.தற்போது இவரது நடிப்பில் பார்ட்னர், ரவுடி பேபி, மை நேம் இஸ் ஸ்ருதி, 105 மினிட்ஸ், மஹா, ஒரு கல் ஒரு கண்ணாடிக்குப் பிறகு இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் இரண்டாவது முறையாக இணையும் ஹாட்ஸ்டார் ஒரிஜினல்ஸ் மற்றும்
“வாலு” புகழ் இயக்குனர் விஜய் சந்தருடன் இணையும் ஒரு படமும் அடங்கும். இது தவிர இயக்குனர் R கண்ணன் இயக்கத்தில் ஒரு திரைப்படமும், மேலும் சில படங்களின் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
தனது ரசிகர்களுக்கு இந்த புது ஆண்டில் தனது பாணியில் அட்வைஸ் கொடுத்துள்ளார். “கடந்த ஆண்டு அனைவருக்கும் ஒரு பெரிய சவாலாக இருந்தது. குறிப்பாக, திரையுலகம் தாங்க முடியாத கடினமான சோதனைகளால் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டது, ஆனால் இந்த 2022 புத்தாண்டின் போது அனைவரின் வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்புவது, இருட்டை விலக்கி தூரத்தில் தெரியும் வெளிச்சம் போல், பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. திரையுலக நண்பர்கள், பத்திரிகை நண்பர்கள் மற்றும் ஊடகங்கள், ரசிகர்கள், விமர்சகர்கள் மற்றும் இந்த கடினமான நேரத்தில் ஆதரவாக இருந்த அனைவரின் அன்பிற்கும் நன்றி கூறிக்கொள்கிறேன்.
உங்களின் அன்பு தான் இந்த உலகத்தை முன்னோக்கி பயணிக்க வைக்கிறது, இந்த கடின காலத்தில் அன்பை அள்ளித்தரும் அவர்களை ஏராளமாகக் கண்டுபிடித்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். தயாரிப்பு நிலையின் வெல்வேறு கட்டத்தில் உள்ள எனது 9 வெவ்வேறு திரைப்படங்களை உங்களுக்கு அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த ஆண்டு அனைவரின் கனவுகளும், இலக்குகளும் நனவாக வேண்டும் என்று நான் விரும்புகிறேன். மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும், வெற்றிகரமாகவும் இருங்கள், மேலும் நேர்மறை எண்ணத்தை பரப்ப மறக்காதீர்கள், அனைவரிடத்திலும் அன்பை பரப்ப வேண்டியது காலத்தின் தேவை. நன்றி…"என்று தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.