Beast Intro April 13
Beast Others
www.garudabazaar.com

ஜி வி பிரகாஷின் ‘இடிமுழக்கம்’… சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட பிரபல இசை நிறுவனம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சீனு ராமசாமி இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் நடிக்கும் ‘இடிமுழக்கம்’ ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி வருகிறது.

GV prakash idi muzhakkam music rights bought by sony music

Also Read | ஜி வி பிரகாஷ் கௌதம் மேனன் நடித்த ‘செல்ஃபி’… முன்னணி ஓடிடியில் – வெளியான exciting தகவல்!

சீனு ராமசாமி- ஜி வி பிரகாஷ் கூட்டணி…

Skyman Films International தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் தயாரிப்பில், பிக்பாஸ் முகேன் நாயகனாக நடித்த “வேலன்” திரைப்படம் வெளியாகி கவனத்தைப் பெற்றது. இதையடுத்து அந்நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் “இடிமுழக்கம்” திரைப்படம் உருவாகி வருகிறது. கிராமத்து பின்னணியில் புதுமையான ஒரு திரில்லர் படமாக இப்படம் உருவாகி வருகிறது. NR.ரகுநந்தன் இசையமைக்க, கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார்.

சீனுராமசாமியின் மாறுபட்ட கதைக்களம்..

வழக்கமாக மென்மையாக கதைகளை இயக்கி வரும் சீனுராமசாமி முதல் முறையாக இடிமுழக்கம் படத்தில் ஆக்ஷன் களத்துக்கு மாறியுள்ளார். படம் பற்றி பேசிய படத்தின் தயாரிப்பாளர் முபாரக்  “இயக்குநர் சீனு ராமசாமி அவரின் இயல்பான படங்களிலிருந்து மாறுபட்டு, முதன்முறையாக கிராமப்புற பின்னணியில் ஒரு திரில்லர் படத்தை இயக்குகிறார். இப்படம் ஆரம்ப நொடியிலிருந்து இறுதிவரை, எதிர்பாரா திருப்பங்களுடன், ஒரு பரபரபான திரைப்படமாக, திரையரங்கில் ரசிகர்களுக்கு ஆச்சர்யம் தரும் படைப்பாக இருக்கும்.” எனக் கூறியிருந்தார்.

GV prakash idi muzhakkam music rights bought by sony music

விறுவிறுப்பாக நடந்து முடிந்த படப்பிடிப்பு…

இந்த படப்பிடிப்பு தொடங்கி குறுகிய நாட்களில்  ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் நடத்தி முடித்துள்ளார் இயக்குனர் சீனுராமசாமி. இதையடுத்து இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. சீனு ராமசாமி இயக்கியுள்ள மாமனிதன் திரைப்படம் மே 20 ஆம் தேதி ரிலீஸாகிறது. அதற்குப் பின்னர் இந்த படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென்மேற்கு பருவக் காற்று HIT Combo…

தென் மேற்கு பருவக்காற்று படத்துக்குப் பிறகு இயக்குனர் சீனுராமசாமி – இசையமைப்பாளர் NR ரகுநந்தன் – பாடலாசிரியர் வைரமுத்து ஆகிய மூவரும் இடிமுழக்கம் படத்துக்காக இணைந்துள்ளனர். இதனால் இந்த படத்தின் பாடல்கள் மீது எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ஆடியோ உரிமையை முன்னணி நிறுவனமான ’சோனி மியுசிக்’ கைப்பற்றியுள்ளது. இது சம்மந்தமான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்போடு தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளது.

GV prakash idi muzhakkam music rights bought by sony music

Also Read | ”இனிமே வாழ்க்கையே கடுமையாக மாறப்போகுது” – கர்ப்பகாலத்தில் கணவருக்காக உருகிய காஜல்!

தொடர்புடைய இணைப்புகள்

GV prakash idi muzhakkam music rights bought by sony music

People looking for online information on GV Prakash, Idi Muzhakkam, Sony Music will find this news story useful.