Beast Intro April 13
Beast Others
www.garudabazaar.com

ஜி வி பிரகாஷ் கௌதம் மேனன் நடித்த ‘செல்ஃபி’… முன்னணி ஓடிடியில் – வெளியான exciting தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜி வி பிரகாஷ் குமார் மற்றும் இயக்குனர் கௌதம் மேனன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்த செல்ஃபி திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

GV prakash gautham menon starred selfie movie in aha ott

Also Read | ஜல்லிக்கட்டு காளையோடு சூர்யா… செம்ம மாஸ்ஸா புத்தாண்டு வாழ்த்து … வைரல் வீடியோ!

ஜி வி பிரகாஷின் செல்ஃபி…

இயக்குனர் வெற்றிமாறனின் உதவியாளர் மதிமாறன் இயக்கத்தில் ஜி வி பிரகாஷ்குமார், வர்ஷா பொல்லம்மா மற்றும் கௌதம் மேனன் முக்கிய வேடங்களில் நடித்துள்ள திரைப்படம் செல்ஃபி. டி ஜி பிலிம் கம்பெனி மூலமாக சபரிஷ் என்பவர் தயாரித்துள்ளார். மற்ற முக்கிய வேடங்களில் வித்யா பிரதீப், சங்கிலி முருகன், டி.ஜி.குணாநிதி, வாகை சந்திரசேகர், சுப்பிரமணியம் சிவா மற்றும் பலர் துணை வேடங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.  இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட்டார். இந்த திரைப்படம் பரவலான கவனத்தைப் பெற்றது.

GV prakash gautham menon starred selfie movie in aha ott

வித்தியாசமான கதைக்களம்…

கனல் (ஜி.வி. பிரகாஷ்) ஒரு பொறியியல் மாணவர், அவர் தனது தந்தையால் ஒரு பிரபலமற்ற கல்லூரியில் கட்டாயமாக சேர்த்துவிடப் படுகிறார். கமிஷனுக்கான மாணவர்களுக்கு சீட் பிடித்துக் கொடுத்தால் விரைவாக பணக்காரர் ஆகிவிடலாம் என்று தெரிந்துகொள்ளும் கனல் அந்த வழியில் செல்கிறான். அவர் அதே வேகத்தில் மிகப்பெரிய சிக்கலில் சிக்கிக் கொள்கிரார். இந்த பிரச்சனையில் அவரின் சிறந்த நண்பர் ஒருவரையும் இழக்கிறார். இந்த பிரச்சனைகளில் இருந்து அவர் எப்படி வெளியேறுகிறார் என்பதை விறுவிறுப்பாக சொன்னது செல்ஃபி திரைப்படம். இதில் கௌதம் மேனன் மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

GV prakash gautham menon starred selfie movie in aha ott

15 நாளில் ஓடிடியில்…

இந்நிலையில் திரையரங்குகளில் வெளியாகி 14 நாட்களே ஆன நிலையில் முன்னணி ஓடிடி நிறுவனமான ஆஹா தமிழ் ஓடிடியில் இன்று முதல் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் சமீபத்தில் கால்பதித்த ஆஹா ஓடிடி ரைட்டர் உள்ளிட்ட வெற்றிப் படங்களை வாங்கி வெளியிட்டு வருகிறது. இது சம்மந்தமான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சோனி மியூசிக் நிறுவனம் தற்போது சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளது.

Also Read | ”வேல முடிஞ்சிடுச்சு… ரொம்ப exciting-ஆ இருக்கு”… அடடே.. சமந்தா பகிர்ந்த செம தகவல்!

தொடர்புடைய இணைப்புகள்

GV prakash gautham menon starred selfie movie in aha ott

People looking for online information on Aha OTT, Gautham Menon, Gautham Vasudev Menon, GV Prakash, Selfie movie will find this news story useful.