www.garudabazaar.com

COBRA-க்கு சொந்த குரலில் டப்பிங் பேசினாரா இர்பான் பதான்? அவரே சொன்ன EXCLUSIVE தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் தயாராகி, நாளை ஆகஸ்ட் 31 ஆம் தேதியன்று வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘கோப்ரா’.

Vikram Cobra Movie Irfan Pathan Exclusive Interview

Also Read | அமெரிக்காவில் வசூலில் மாஸ் காட்டிய தனுஷ்.. 'திருச்சிற்றம்பலம்' படத்தின் முழு வசூல் விவரம்!

இந்த படத்தில்  விக்ரமுக்கு ஜோடியாக ‘கே ஜி எஃப்’ படப்புகழ் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், குஜராத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்நிலையில் கோப்ரா படம் குறித்து நடிகர் இர்பான் பதான் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்துள்ளார். அதில், 'கோப்ரா படத்திற்கு சொந்த குரலில் டப்பிங் பேசி உள்ளீர்களா?' என்ற கேள்விக்கு இர்ஃபான் பதான், "படத்திற்கு டப்பிங் சொந்த குரலில் பேசவில்லை, ஆனால் படப்பிடிப்பு தளத்தில் காட்சிகளை படமாக்கும் போது என்னுடைய சொந்த குரலில் வசனங்களை தமிழில் பேசி நடித்தேன்" என பதான் பதில் அளித்துள்ளார்.

Vikram Cobra Movie Irfan Pathan Exclusive Interview

இந்த படத்தில் இர்பான் பதான் பிரான்ஸ் இன்டர்போல் அதிகாரியாக 'அஸ்லான் இல்மஜ்' எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

‘இசைப்புயல்’ ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ பட நிறுவனத்தின் சார்பில் பிரபல தயாரிப்பாளர் எஸ். எஸ். லலித்குமார் தயாரித்திருக்கிறார்.  இந்த படத்தை தமிழகம் முழுவதும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது.

Vikram Cobra Movie Irfan Pathan Exclusive Interview

கோப்ரா படத்தின் UK & ஐரோப்பா தியேட்டர் ரிலீஸ் உரிமத்தை பிரபல அகிம்சா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.  கோப்ரா படத்தின் சேட்டிலைட் உரிமம் கலைஞர் டிவிக்கு விற்கப்பட்டுள்ளது.

Vikram Cobra Movie Irfan Pathan Exclusive Interview

‘கோப்ரா’ படத்தின் பாடல்கள் & முன்னோட்டம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Also Read | 'நட்சத்திரம் நகர்கிறது' படம் பார்த்த அனுராக் காஷ்யப்.. படம் பற்றி அவரே இட்ட வைரல் பதிவு!

COBRA-க்கு சொந்த குரலில் டப்பிங் பேசினாரா இர்பான் பதான்? அவரே சொன்ன EXCLUSIVE தகவல்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Vikram Cobra Movie Irfan Pathan Exclusive Interview

People looking for online information on Chiyaan Vikram, Cobra, Irfan Pathan Exclusive Interview, Vikram, Vikram cobra movie will find this news story useful.