Breaking : விஜய்யுடன் அறிவிக்கப்பட்ட தலைப்பு போலவே அடுத்தப் படத்துக்கு டைட்டில் வைத்த கௌதம்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Jul 22, 2019 07:04 PM
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் உள்ளிட்டோர் நடித்து உருவாகியுள்ள படம் 'எனை நோக்கி பாயும் தோட்டா'. இந்த படத்துக்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் இருந்து மறுவார்த்தை பேசாதே, விசிறி போன்ற பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இதனையடுத்து கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கும் படம் குறித்து எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் படி இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி கே.கணேஷ் இயக்கவுள்ளாராம்.
இந்த படத்தில் வருண் ஹீரோவாக நடிக்கவிருக்கிறாராம். இவர் 'ஒரு நாள் இரவில்', 'எல்கேஜி' போன்ற படங்களில் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரு வாரத்திற்கு முன் தொடங்கி லண்டனில் நடைபெற்று வருகிறதாம்.
எங்களுக்கு கிடைத்த தகவலின் படி இந்த படத்துக்கு 'ஜோசுவா: அத்தியாயம் ஒன்று' என்று பெயரிடப்பட்டுள்ளதாம். ஏற்கனவே தளபதி விஜய் - கௌதம் வாசுதேவ் மேனன் இருவரும் 'யோகன் - அத்தியாயம் ஒன்று' என்ற படத்தில் இணைவதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.