கௌதம் மேனனின் 'ஜோஷ்வா இமை போல் காக்க' படத்தில் இருந்து Hey Love - புரோமோ வீடியோ
முகப்பு > சினிமா செய்திகள்ஃபகத் பாசில், நஸ்ரியா உள்ளிட்டோருடன் இயக்குநர் கௌதம் மேனன் இணைந்து நடித்த டிரான்ஸ்(Trance) திரைப்படம் கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இயக்குநர் கௌதம் மேனனுக்கு இன்று (பிப்ரவரி 25) பிறந்தநாள் என்பதால் பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
![கௌதம் மேனனின் ஜோஷ்வா இமை போல் காக்க பட ஹே லவ் பாடல் இதோ | Gautham Menon's Joshua Imai Pol Kaakha Hey Love Song Promo Out கௌதம் மேனனின் ஜோஷ்வா இமை போல் காக்க பட ஹே லவ் பாடல் இதோ | Gautham Menon's Joshua Imai Pol Kaakha Hey Love Song Promo Out](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/gautham-menons-joshua-imai-pol-kaakha-hey-love-song-promo-out-photos-pictures-stills.png)
இந்நிலையில் அவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக கௌதம் மேனன் தற்போது இயக்கி வரும் 'ஜோஷ்வா இமை போல் காக்க' படத்தில் இருந்து ஹே லவ் பாடலின் வீடியோ புரோமோ வெளியாகியுள்ளது. மேலும் முழு பாடல் வருகிற பிப்ரவரி 29 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் வருண் மற்றும் ராஹேய்(Raahei) இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்துக்கு எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் டீஸர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தை வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி கே.கணேஷ் தயாரித்துள்ளார்.
கௌதம் மேனனின் 'ஜோஷ்வா இமை போல் காக்க' படத்தில் இருந்து HEY LOVE - புரோமோ வீடியோ வீடியோ