கௌதம் மேனன் பரபரப்பான சாலையில் டைரக்ட் செய்யும் காட்சி - வைரலாகும் ஃபோட்டோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் கௌதம் மேனனின் பிறந்த நாளை முன்னிட்டு சமூக வலைதளப் பக்கங்களில் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். மேலும் அவரது படங்களில் உள்ள சிறப்பம்சம் குறித்து பதிவுகள் எழுதி வருகின்றனர்.

இயக்குநர் கௌதம் மேனன் சாலை ஓரத்தில் கேமரா முன் இருக்கும் ஃபோட்டோ | Gautham Menon with Camera On road side Photo Goes Viral

இந்நிலையில் அம்பர் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கௌதம் மேனன் சாலை ஓரத்தில் கேமரா முன் இருப்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இது விளம்பரப் படப்பிடிப்பு என்று அவர் தன் ஹேஷ்டேக் மூலம் குறிப்பிட்டுள்ளார்.

கௌதம் மேனன் தற்போது இயக்கி வரும் ஜோஷ்வா இமை போல் காக்க படத்தில் வருண் மற்றும் ராஹேய்(Raahei) இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்துக்கு எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் டீஸர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தை வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி கே.கணேஷ் தயாரித்துள்ளார்.

Entertainment sub editor