நம்ம இசைஞானிக்கு கேரள அரசு வழங்கும் உயரிய கௌரவம் !
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Dec 27, 2019 01:04 PM
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பெரும்பாலான இந்திய மொழிகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து இசையுலகில் ராஜாவாக அமர்ந்திருப்பவர் இசைஞானி இளையராஜா.

இந்நிலையில் இளையராஜாவிற்கு பெருமை சேர்க்கும் விதமாக கேரள அரசு சார்பில் அவருக்கு ஹரிவராசனம் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது அவருக்கு வருகிற ஜனவரி 15 ஆம் தேதி காலை 9 மணிக்கு சபரிமலை சன்னிதானத்தில் வைத்து அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் இளையராஜா இசையில் 'சைக்கோ' படத்தில் இருந்து வெளியான உன்ன நெனச்சு பாடல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடலை கபிலன் எழுத, சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். மிஷ்கின் இயக்கியுள்ள இந்த படத்தில், உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்துள்ளார்.
Tags : Ilaiyaraaja, Harivarasanam, Kerala