www.garudabazaar.com

டிவிட்டரில் டிரெண்ட் ஆன Unfair for Gaby... Gaby-க்கு நடந்தது அநியாயம்... கேள்வி கேட்கும் ரசிகர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த வாரம் போட்டியாளர்களுக்கு ஒரு புதிய டாஸ்க் கொடுக்கப்படுகிறது. அதன்படி வெளியே கார்டன் ஏரியாவில் உயர்த்தப்பட்டிருக்கும் பைப்புகளின் வழியே வரும் சிறிய மற்றும் பெரிய பந்துகளைப் இரு அணிகளாகப் பிரிந்து பிடிக்க வேண்டும். இந்த டாஸ்க்கில் சோம், ரியோ, கேபி, ரம்யா அணியினர் சிறப்பாக விளையாடி அதிக பந்துகளை பிடித்தனர்.

Gaby is trending in twitter see the reason டிவிட்டரில் டிரெண்ட் ஆன கேபி

இந்நிலையில் விளையாட்டின் முடிவில் போட்டியாளர்கள் தங்களி வரிசை படுத்த வேண்டும் என்று கூறப்பட்ட போதோ அந்த அணியில் இருந்த சோம் ரியோ மற்றும் ரம்யா முதல்  ஐந்து இடங்களுக்குள் நிற்க கேபிக்கு மட்டும் கடைசி இடம் கொடுக்கப்பட்டது. இதற்கு காரணமாக பந்துகள் பிடித்தது தான் கணக்கு என்று ஏதேதோ காரணங்கள் கொடுக்கப்பட்டது. ஆனால் பிக்பாஸ் ரசிகர்கள் இதனை கடுமையாக எதிர்த்துள்ளனர். "கேபி கேட்டது 7-வது இடம். நிச்சயம் ஆஜீத் மற்றும் ஷிவானியை விடவும் அவர் சிறப்பாக தான் விளையாடினார் ஆனால் அவரை கடைசி இடத்தில் நிற்க வைத்தது கொஞ்சம் கூட நியாயம் இல்லை" என்று ரசிகர்கள் தங்கள் குமுறலை டிவிட்டரில் தெரிவிக்க 'Unfair for gaby' என்ற ஹாஷ்டாக் டிரெண்ட் ஆகி வருகிறது.

டிவிட்டரில் டிரெண்ட் ஆன UNFAIR FOR GABY... GABY-க்கு நடந்தது அநியாயம்... கேள்வி கேட்கும் ரசிகர்கள்..! வீடியோ

Gaby is trending in twitter see the reason டிவிட்டரில் டிரெண்ட் ஆன கேபி

People looking for online information on Biggboss4tamil, Gaby will find this news story useful.