“ஆனந்த கண்ணன்” பத்தி இவ்ளோ இருக்கா? திரைத்துறை & வெளிநாட்டு நண்பர்கள் உருக்கமான Live வீடியோ!
முகப்பு > சினிமா செய்திகள்பிரபல நடிகர், நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆனந்த கண்ணன் கேன்சரால் மரணம் அடைந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்நிலையில் அவரது திரைத்துறை மற்றும் சிங்கப்பூர் வாழ் நண்பர்கள் பலரும் நேரலை இணையவழி நேர்காணலில் ஆனந்த கண்ணனை பற்றி உருக்கமாக பேசியுள்ளனர்.
அதில் பேசியவர்கள், “ஆனந்தக் கண்ணனின் மறைவு ஒரு பெரிய இழப்பு. அவருடைய மறைவு என்பது குறிப்பாகதமிழ்ச் சமுதாயத்திற்கு மிகப் பெரிய இழப்பு. கலைப்படைப்பு மூலமாக தமிழை வளர்க்க வேண்டும் என்கிற ஆர்வம் அவருக்குள் இருந்தது. சிங்கை வாழ் தமிழராக இருந்த அவருக்கு இந்த வயதில் இப்படி ஒரு இழப்பு என்பது எங்களுக்கு கஷ்டமாக இருக்கிறது.
ஆனந்த கண்ணன் உருவாக்கிய மரபுவழி தமிழ் கலைப்படைப்புகள் சிங்கப்பூரில் என்றும் வாழும். அதற்கு உயிர் கொடுத்த ஆனந்த கண்ணனுக்கு தமிழ் சமுதாயம் என்றும் கடமைப் பட்டிருக்கிறது.
ஆனந்த கண்ணன் யாரையுமே அவ்வளவு குறைவாக மதிப்பிட மாட்டார். அவர் அவ்வளவு பெரிய உச்சத்திலிருந்து மற்றவர்களின் திறமைகளையும் மதிப்பார். மற்றவர்களின் பாராட்டுவார். ஆனந்த கண்ணன் சிரித்து தான் அனைவரும் பார்த்திருக்கிறோம்.
அவர் முகத்தில் எப்போதும் அந்த புன்முறுவல் இருக்கும். அதனால் இந்த சோகத்தை ஏற்றுக் கொள்ளவே முடிவதில்லை. அவருடைய இழப்பு ஜீரணிக்க முடியாத, அதிர்ச்சியான ஒரு செய்தி.” என்று பகிர்ந்துகொண்டனர்.
இதேபோல் கீர்த்தி சுரேஷ் நடித்த பெண்குயின் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நடிகர் மதி, ஆனந்த கண்ணன் பற்றி கூறும்போது, “ஆனந்த கண்ணனை இழந்ததை இன்னும் நம்ப முடியாத ஒரு மனநிலையில் தான் இருக்கிறேன். அவருடைய குடும்பத்தை ரொம்ப வருடங்களாக தெரியும். எப்படி அவர்களை சந்திக்க போகிறேன் என்று தெரியவில்லை.
அவர்களுக்கு ஆனந்த கண்ணனின் இறப்பு என்பது எப்படி இருக்கும் என்பதை நான் கற்பனை கூட பண்ணி பார்க்க முடியவில்லை” என்று உருக்கமாகப் பேசி இருக்கிறார்.
தொடர்ந்து ஆனந்த கண்ணனின் மறைவு குறித்து அவரது நண்பர்கள் கூறும் பல்வேறு உருக்கமான நினைவுகளையும் கருத்துக்களையும் இணைப்பில் இருக்கும் வீடியோவில் காணலாம்.
“ஆனந்த கண்ணன்” பத்தி இவ்ளோ இருக்கா? திரைத்துறை & வெளிநாட்டு நண்பர்கள் உருக்கமான LIVE வீடியோ! வீடியோ