www.garudabazaar.com

நட்புனா என்னனு தெரியுமா! #RRR படத்தின் அடுத்த மாஸ் அப்டேட் வந்துருச்சு!!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாகுபலி படங்களின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வரவிருக்கும் படம் "RRR".

RRR movie update regarding friendship natpu first single

சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜீ மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை தழுவி உருவாகிறது. இதில் ராம்சரண், ஜூனியர் NTR கதாநாயகர்களாக நடிக்கின்றனர். இவர்களுடன் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ஆலியாபட், சமுத்திரக்கனி ஆகியோர் முன்னனி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ராஜ மௌலியின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் செந்தில்குமார் ISC ஒளிப்பதிவு செய்கிறார், படத்தின் எடிட்டிங் பணிகளை ஸ்ரீகர் பிரசாத் கையாள்கிறார், இசையமைப்பாளர் கீரவாணி இசையமைக்கிறார். 

இந்த படத்தின் முதல் பாடல் ஆகஸ்ட் 1 ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளிவரும் என்று தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். அது மட்டுமன்றி இந்த பாடல், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் நட்பை அடிப்படையாக கொண்டு ஒரே மாதிரியாக பெயரிடப்பட்டுள்ளது, ஐந்து மொழிகளில் இதை ஐந்து வெவ்வேறு பாடகர்கள்-இசைக்கலைஞர்கள் பாடியுள்ளனர்.

எம்.எம்.கீரவணி இசை அமைத்துள்ள இந்த பாடலுக்கு விஜய் யேசுதாஸ், அனிருத் ரவிச்சந்தர், அமித் திரிவேதி, யாசின் நிசார் மற்றும் ஹேமச்சந்திரா ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர். முன்னதாக இந்த படத்தின் இசை உரிமையை டி சீரிஸ் மற்றும் லஹரி மியூசிக் நிறுவனங்கள் நல்ல விலைக்கு வாங்கின.

தொடர்புடைய இணைப்புகள்

RRR movie update regarding friendship natpu first single

People looking for online information on Ajay devgan, Alia Bhatt, Anirudh Ravichander, Jr ntr, Ram Charan, RRR will find this news story useful.