ஃபோர்ப்ஸின் 100 Celebrities லிஸ்ட்டில் தமிழ் சினிமாவில் யாருலாம் இருக்காங்க தெரியுமா ?
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Dec 19, 2019 12:45 PM
ஃபோர்ப்ஸ் இதழ் ஒவ்வொருவருடமும் கிரிக்கெட் வீரர்கள், நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 2019 ஆம் ஆண்டுக்கான பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியல் ஒருவரின் பிரபலத்தன்மை, வருமானம், சமூக வலைதளங்களில் அவர்களுக்கு இருக்கும் வரவேற்பு உள்ளிட்ட காரணங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளதாக ஃபோர்ப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்த ஆண்டு இந்திய அளவில் 100 Celebrities கொண்ட பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். அக்ஷய் குமார், சல்மான் கான், அமிதாப் பச்சன், எம்.எஸ்.தோனி, ஷாருக் கான் ஆகியோர் முறையே 2, 3, 4, 5, 6 இடங்களில் உள்ளனர்.
தமிழ் சினிமாவை பொறுத்த வரை ரஜினிகாந்த், 13வது இடத்திலும், ஏ.ஆர்.ரஹ்மான் 16 இடத்திலும் உள்ளனர். பிரபாஸ் 44 இடத்திலும், நடிகர் விஜய் 47 இடத்திலும் உள்ளனர். அஜித் குமார் 52 இடத்திலும், மகேஷ் பாபு 54வது இடத்திலும், இயக்குநர் ஷங்கர் 55 இடத்திலும், கமல்ஹாசன் 56 இடத்திலும் உள்ளனர். தனுஷ் 64 இடத்திலும் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் 84 இடத்திலும் உள்ளனர்.