www.garudabazaar.com

புலி முருகனை தொடர்ந்து சர்தார்ஜியாக மோகன் லால்! பட்டைய கிளப்பும் FIRST LOOK போஸ்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

புலிமுருகனுக்குப் பிறகு  இயக்குனர் வைஷாக் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

first look poster of monster starring Mohanlal has been released

படத்தின் பெயர் 'மான்ஸ்டர்'. லக்கி சிங் எனும் சர்தார்ஜி வேடத்தில் மோகன்லால் நடிக்கிறார். இதுவரை இல்லாத கெட்டப்பில் மோகன்லால் இந்த படத்தில் வருகிறார். புலிமுருகன் படத்தின் திரைக்கதையை எழுதிய எழுத்தாளர் உதய் கிருஷ்ணன் எழுதியுள்ளார். படத்தை ஆண்டனி பெரும்பாவூர் ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.

first look poster of monster starring Mohanlal has been released

புலிமுருகன் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு மீண்டும் இணையும் இந்த கூட்டணியை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஒளிப்பதிவாளர் சதீஷ் குருப் ஒளிப்பதிவு செய்ய எடிட்டிங்கை ஷமீர் முகமதுவும்,  இசையை தீபக் தேவ்வும், கலை இயக்குனராக ஷாஜியும், சண்டைக்காட்சிக்கு சில்வாவும் பணிபுரிகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று நவம்பர் 10ஆம் தேதி தொடங்கி உள்ளது.

first look poster of monster starring Mohanlal has been released

மோகன்லால் நடிப்பில் பல படங்கள் அடுத்து வெளியாக உள்ளன. மரக்கார், பிருத்விராஜின் இயக்கத்தில் ப்ரோ டாடி, பி உன்னிகிருஷ்ணன் இயக்கிய ஆராத்து, ஷாஜி கைலாஸின் எலோன் மற்றும் ஜீத்து ஜோசப்பின் 12த் மேன் ஆகியவை வெவ்வேறு கட்டங்களில் தயாராகி வருகின்றன.

first look poster of monster starring Mohanlal has been released

People looking for online information on Mohan Lal, Monster, Puli Murugan will find this news story useful.