www.garudabazaar.com

கண்டிப்பு காட்டும் லால் ஏட்டன்!.. வெளியேறிய மணிக்குட்டன்!.. மீண்டும் நடந்த மிராக்கிள்.. BB3 Viral Promo!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை நான்கு சீசன்கள் நிறைவடைந்து இருக்கின்றன.

BB3 Malayalam Manikuttan returns Mohan lal promo goes viral

இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியிருந்தார். இதே போல் மலையாளத்தில் நடக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி 3 சீசன்களாக நடந்து வருகிறது. தற்போது 3வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மூன்றாவது சீசனில் 70 நாட்களை கடந்து இந்த நிகழ்ச்சி போய்க்கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் சமீபகாலமாக பரபரப்பாகவும் சர்ச்சைக்குரிய வகையிலும் அதேநேரத்தில் விறுவிறுப்பாகவும் பல சம்பவங்கள் போய்க்கொண்டிருக்கின்றன. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் மோகன்லால் தவறு செய்பவர்களை தமிழில் கமல் செய்ததுபோல் சுட்டிக்காட்ட வேண்டும்.

BB3 Malayalam Manikuttan returns Mohan lal promo goes viral

இதனால் மலையாளத்தில் மோகன்லால் சற்றே கடுமையும் கண்டிப்பும் காட்டி வருவதாக கூறப்படுகிறது. சனி ஞாயிறு வந்தாலே போட்டியாளர்கள் நடுங்கி விடுவதாக ரசிகர்கள் கூறுகின்றனர். முன்னதாக சக பெண் போட்டியாளரான டிம்பிள் பாயை பிரபல போட்டியாளர் கிடிலம் பைரோஸ் தொடர்ந்து விமர்சித்து வந்த நிலையில் அந்த வாரம் அவரை மோகன்லால் கடிந்துகொண்டார். அவரை வெளியேற்றி விடலாமா என்று டிம்பிளிடமே கேட்டு விட்டார். ஆனால் டிம்பிள் மன்னித்ததால் மோகன்லால் விட்டுவிட்டார்.

BB3 Malayalam Manikuttan returns Mohan lal promo goes viral

இதேபோல் கடந்த 15 வருடங்களாக மலையாள சினிமாவில் நடித்து வருபவருமான மணிகுட்டன் அதே பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக இருக்கிறார். அண்மையில் அவருக்கு தலைகனம் அதிகமாகி விட்டதாகவும் இதனால் பிக்பாஸில் வீட்டின் முகம் மாறுவதாகவும் கண்டித்தார் மோகன்லால். இதனிடையே நேற்றைய எபிசோடில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற விரும்புவதாகவும் தன்னை கன்ஃபெஷன் அறைக்கு அழைத்து பேசுமாறும் தொடர்ந்து கேட்டுக் கொண்டார் மணிக்குட்டன். அதுவரை தான் உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும் கூற ஆரம்பித்து விட்டார். இதனால் அவரை அந்த அறைக்கு அழைத்து பிக்பாஸ் பேச்சுவார்த்தை நடத்தியபோது அவர் தன்னால் மன அழுத்தத்தை தாங்க முடியவில்லை என்றும் சினிமாவில் 15 வருடங்களாக சேர்த்து வைத்த பெயர் இந்த நிகழ்ச்சி மூலம் பறிபோய்விடும் என்றும் தான் வெளியேற விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.

BB3 Malayalam Manikuttan returns Mohan lal promo goes viral

ஒரு கட்டத்தில் மணிக்குட்டன் மற்றும் சக போட்டியாளர்கள் என யாரும் எதிர்பாராத விதமாக பிக்பாஸ் வீட்டின் மெயின் கதவை பிக்பாஸ் திறந்துவிட,  அப்போது மணிகுட்டன் வெளியேற விரும்பினால் வெளியேறலாம் என்று பிக்பாஸ் குரல் ஒலிக்க பிக்பாஸ் வீட்டில் இருந்து மணிகுட்டன் வெளியேறினார். இப்படி பரபரப்பாக சென்று கொண்டிருந்த இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் மணிகுட்டன் வெளியேறியது பல ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Asianet (@asianet)

இந்நிலையில் மீண்டும் பிக் பாஸ் வீட்டு மெயின் கேட் திறக்கப்பட, சந்தோஷமாக துள்ளிக் குதித்து மணிக்குட்டன் உள்ளே வருவது மாதிரியான புரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. இதனால் மணிக்குட்டன் ஆர்மியைச் சேர்ந்தவர்கள் மீண்டும் உற்சாகம் அடைந்திருக்கின்றனர்.

ALSO READ: பிக்பாஸ் சுஜா வருணியை நியாபகம் இருக்கா? இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா? வைரல் ஆகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

மேலும் செய்திகள்

BB3 Malayalam Manikuttan returns Mohan lal promo goes viral

People looking for online information on ബിഗ് ബോസ് മലയാളം, BiggBossMalayalam3, Mohan Lal will find this news story useful.