www.garudabazaar.com

"இவ்ளோ சின்ன வயசுல..".. புனித் ராஜ்குமார் மறைவுக்கு கலங்கும் ரஜினி.. அவரே பேசிய உருக்கமான ஆடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் மகனும், சிவராஜ்குமாரின் சகோதரருமான புனித் ராஜ்குமார் அண்மையில் மாரடைப்பால் மரணமடைந்தார்.

Rajinikanth deep condolence for Puneeth Rajkumar demise

இவருடைய மரணம் கன்னட திரையுலகை மட்டுமல்லாமல் தென்னிந்திய திரை உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. குறிப்பாக புனித் ராஜ்குமாரின் ரசிகர்கள் அவருடைய மரணத்தை தாங்க இயலாத துயரத்துக்கு ஆளாகினர். இதனைத் தொடர்ந்து புனித் ராஜ்குமாரின் சமாதிக்கு தமிழ் நடிகர்கள் சூர்யா, விஜய் சேதுபதி, அர்ஜுன், சிவகார்த்திகேயன் என பலரும் சென்று நேரில் அஞ்சலி செலுத்திவந்தனர்.

Rajinikanth deep condolence for Puneeth Rajkumar demise

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் புனித் ராஜ்குமாரின் மறைவையொட்டி ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து, தனது மகள் சவுந்தர்யா அண்மையில் தொடங்கிய ஹூட் ஆப்பில் வாய்ஸ் மெசேஜ் பதிவிட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் மற்றும் புனித் ராஜ்குமாரின் தந்தையார் ராஜ்குமார் இருவரும் நல்ல நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்த விஷயம்.

Rajinikanth deep condolence for Puneeth Rajkumar demise

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த், தான் மருத்துவமனையில் இருக்கும்போது, புனித் ராஜ்குமார் இறந்த தகவல் தனக்கு கிடைத்ததாகவும் அதுவும் இரண்டு நாட்கள் கழித்துதான் தனக்கு அந்த தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டு, உருக்கமான இரங்கல் பதிவை வாய்ஸ் மெசேஜாக பேசி ஹூட் ஆப்பில் பதிவிட்டிருக்கிறார்.

Rajinikanth deep condolence for Puneeth Rajkumar demise

அதில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “அனைவருக்கும் வணக்கம்! எனக்கு சிகிச்சை முடிந்து நன்றாக குணமாகி கொண்டு வருகிறேன். நான் மருத்துவமனையில் இருந்தபோது புனித் ராஜ்குமார் அவர்கள் அகால மரணம் அடைந்தார் என்கிற தகவலை இரண்டு நாள் கழித்து தான் சொன்னார்கள். அதை கேட்டு நான் மிகவும் வேதனைப்பட்டேன்.

Rajinikanth deep condolence for Puneeth Rajkumar demise

மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. என் கண்ணுக்கு முன்னால் வளர்ந்த திறமையான, அன்பும் பண்பும் கொண்ட அருமையான குழந்தை. நல்ல பெயரும் புகழும் உச்சியிலும் இருக்கும் பொழுது இவ்வளவு சின்ன வயதில் மறைந்துவிட்டார்.  அவருடை இழப்பு கன்னட திரை உலகத்தில் ஈடு செய்ய முடியாத ஒரு இழப்பு. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்வதற்கு எனக்கு வார்த்தைகளே இல்லை. புனித் ராஜ்குமார் ஆத்மா சாந்தி அடையட்டும். நன்றி!” என்று தெரிவித்திருக்கிறார்.

"இவ்ளோ சின்ன வயசுல..".. புனித் ராஜ்குமார் மறைவுக்கு கலங்கும் ரஜினி.. அவரே பேசிய உருக்கமான ஆடியோ! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Rajinikanth deep condolence for Puneeth Rajkumar demise

People looking for online information on Hoote, Hooteapp, Puneeth rajkumar, Rajinikanth, RIP, RIPPuneeth, RIPPuneethRajkumar will find this news story useful.