‘அட்ரா சக்க’.. 5வது சீசன் ‘பிக்பாஸ்’ல கன்ஃபெஷன் ரூம்க்கு அழைக்கப்பட்ட முதல் போட்டியாளர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியில் விறுவிறுப்பான கட்டம் தொடங்கிவிட்டது என்று சொல்லலாம்.

first content went to confession room biggbosstamil5

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் விஜய் டிவி தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி மாலை 6 மணி முதல் ஒளிபரப்பாக தொடங்கிய இந்த போட்டியில், முதல் நாளே 18 போட்டியாளர்கள் களமிறக்கப்பட்டனர்.

சின்னபொண்ணு, இமான் அண்ணாச்சி தவிர, பெரும்பாலும் இளைய வயது உடையவர்கள் பங்கேற்றுள்ள இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலவையான துறைகளில் இருந்து பலரும் பங்கேற்று இருக்கின்றனர். பாடகர்கள், சீரியல் நடிகர்கள், மாடல்கள், இசைக் கலைஞர்கள் என இந்த போட்டியாளர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியை வழிநடத்திச் சென்று கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் பிக்பாஸ், போட்டியாளர்களிடையே நேரடியாக பேசித் தொடங்கியிருக்கிறார். முதற்கட்டமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கன்ஃபெஷன் அறைக்கு ஒருவர் அழைக்கப்பட்டு இருக்கிறார்.

அவர்தான் மாஸ்டர் சிபி. நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் சிபி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் வந்து போவார். இந்த நிலையில் மாஸ்டர் சிபியை பிக்பாஸ், கன்ஃபெஷன் அறைக்கு முதன்முதலில் அழைத்திருக்கிறார். அவரை அழைத்த உடனேயே கன்ஃபெஷன் அறைக்கு  இந்த சீசனில் சென்றிருக்கும் முதல் போட்டியாளர் சிபி தான் என்று புகழாரம் சூட்டினார் விஜே பிரியங்கா.

பிக்பாஸ் அறைக்குள் அழைத்த பிக்பாஸ், சிபியிடம் அவர் முன்னாள் ஒரு பேப்பர் இருப்பதாகவும், அதை எடுத்துச்சென்று அனைவரின் முன்னிலையிலும் படித்து காட்டுமாறும் குறிப்பிட்டிருந்தார்.

அதை ஏற்றுக்கொண்டு அவ்வாறே, பேப்பரை எடுத்துக்கொண்டு வெளியே சென்றார் சிபி. இதன் மூலம் இந்த பிக்பாஸ் சீசன் 5-ல் கன்ஃபெஷன் அறைக்கு அழைக்கப்பட்ட முதல் போட்டியாளர் என்கிற பெருமையை சிபியை சேருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

first content went to confession room biggbosstamil5

People looking for online information on Abhinav, Akshara Reddy, பிக்பாஸ், விஜய் டிவி BBTamilSeason5, Biggbosstamil, BiggBossTamil5, Chinnaponnu, GrandLaunch, Ikky Berry, ImanAnnachi, Isaivani, Kamalhassan, Master Cibi, Pavani Reddy, Raju, Thamarai Selvi, Varun, VijayTelevision, VJ Priyanka will find this news story useful.