அல்லு அர்ஜூன் - ராஷ்மிகா நடிக்கும் PAN INDIA புஷ்பா திரைப்படத்தின் அடுத்த அப்டேட்! புதிய போஸ்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'ஆல வைகுந்த புரம்லூ' (2020) படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமாரின் இயக்கத்தில் வெளி வரவிருக்கும் திரைப்படம் 'புஷ்பா தி ரைஸ் (Pushpa - The Rise)'.

allu arjun rashmika pushpa movie second single song update

பான்-இந்தியன் திரைப்படமான 'புஷ்பா' இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தெலுங்கு திரைப்படங்களில் ஒன்றாகும். இயக்குனர் சுகுமார் இதற்கு முன்பு ராம் சரண் மற்றும் சமந்தா நடிப்பில் இந்திய அளவில் பேசப்பட்ட தெலுங்கில் வெளியான 'ரங்கஸ்தலம்' (2018) என்ற சூப்பர்ஹிட் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

allu arjun rashmika pushpa movie second single song update

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள 'புஷ்பா' படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ், தனஞ்சய், சுனில், ஹரிஷ் உத்தமன், வென்னேலா கிஷோர் மற்றும் அனசூயா பரத்வாஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசிலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

allu arjun rashmika pushpa movie second single song update

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இந்தப்படம் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் இந்த படத்தின் ரிலீசை முன்கூட்டியே வெளியிட படக்குழு முடிவு செய்து அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது. அதன் படி வரும் டிசம்பர் 17 ஆம் நாள் வெளியாக உள்ளது. கிறிஸ்துமஸ்க்கு ஒரு வாரம் முன்பு இந்த படம் பல இந்திய மொழிகளில் ரிலிசாகிறது.

allu arjun rashmika pushpa movie second single song update

ஏற்கனவே இந்த படத்தின் போஸ்டர்கள், முதல் சிங்கிள் பாடல்கள் வெளியாகி நல்ல வர்வேற்பை பெற்றன, இந்நிலையில் இந்த படத்தில் நடிக்கும் ராஷ்மிகா மந்தனா தோன்றும் இரண்டாவது சிங்கிள் பாடல் வரும் அக்டோபர் 13 அன்று வெளியாக உள்ளது. இதனை புதிய போஸ்டரை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

allu arjun rashmika pushpa movie second single song update

allu arjun rashmika pushpa movie second single song update

People looking for online information on Allu Arjun, Rashmika Mandhanna will find this news story useful.