www.garudabazaar.com

வெந்து தணிந்தது காடு படத்தில் சிக்ஸ் பேக் சிம்பு! வைரலாகும் புதிய BTS புகைப்படம்!!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களின் வெற்றியை தொடர்ந்து ஏ.ஆர். ரகுமான், சிம்பு மற்றும் கௌதம் மேனன் ஆகிய மூவர் கூட்டணி அடுத்து இணையும் படத்திற்கு ‘வெந்து தணிந்தது காடு’ என பெயரிடப்பட்டுள்ளது.

Venthu thaninthathu kaadu movie silambarasan tr getup

கௌதம் மேனனுடன் எழுத்தாளர் ஜெயமோகன் இந்த படத்திற்காக முதல் முறையாக இணைந்துள்ளார். இவர் ஏற்கனவே நான் கடவுள், அங்காடி தெரு, 2.O, பாபநாசம், சர்கார், இந்தியன்-2, பொன்னியன் செல்வன், விடுதலை உள்ளிட்ட படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்.

Venthu thaninthathu kaadu movie silambarasan tr getup

இந்த படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். கவிஞர் தாமரை பாடலாசிரியராக ஒப்பந்தமாகியுள்ளார். கலை இயக்குனராக ராஜிவ் நாயரும், உடை வடிவமைப்பாளராக கௌதம் மேனனின் தங்கை உத்தாரா மேனனும் பணிபுரிகின்றனர். சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்கிறார். 

Venthu thaninthathu kaadu movie silambarasan tr getup

இந்த படத்தின் படப்பிடிப்பு திருச்செந்தூரில் ஆரம்பமானது. இந்நிலையில் இந்த படத்தில் சிம்புவின் கெட்டப்பை படத்தின் எக்ஸிகியூட்டிவ் தயாரிப்பாளரான அஸ்வின் குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

Venthu thaninthathu kaadu movie silambarasan tr getup

அதில் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவுற்றதாகவும், இந்த படத்தில் சிம்புவின் உடலமைப்பு மாற்றம் மற்றும் சிம்புவின் கடுமையான உழைப்பையும் பாராட்டி சிம்புவின் சிக்ஸ் பேக் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Venthu thaninthathu kaadu movie silambarasan tr getup

People looking for online information on Gautham Vasudev Menon, Silambarasan TR, VTK will find this news story useful.