IndParty
www.garudabazaar.com

தனுஷ் நடிக்கும் அடுத்தடுத்த திரைப்படங்கள்.. செம அப்டேட்ஸ் கொடுத்த இயக்குநர்கள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷ் நடிக்கும் அடுத்தடுத்த திரைப்படங்கள் பற்றி அத்திரைப்படங்களின் இயக்குநர்கள் பதிவிட்டுள்ளனர். 

தனுஷ் படம் பற்றிய தகவல் | exciting announcement on dhanush upcoming project

தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் ஜகமே தந்திரம் ரிலீஸுக்கு ரெடியாக இருக்கிறது. இதை தொடர்ந்து இந்தியில் இவர் அத்ரங்கி ரே படத்தில் நடித்து வருகிறார். 

தனுஷ் படம் பற்றிய தகவல் | exciting announcement on dhanush upcoming project

இந்நிலையில் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதுகுறித்து நடிகர் தனுஷ் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் தனது பதிவில், ''கர்ணன் படபிடிப்பு நிறைவடைந்தது.உறுதுணையாய் இருந்த எல்லாருக்கும் அன்பும் நன்றியும் எப்போதும்'' என பதிவிட்டுள்ளார். 

தனுஷ் படம் பற்றிய தகவல் | exciting announcement on dhanush upcoming project

இதுஒருபுறமிருக்க, இயக்குநர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில், ''D என்று வரும் போது, அது தனி ஸ்பெஷலாக மாறிவிடுகிறது'' என பதிவிட்டுள்ளார். செல்வராகவன் - தனுஷ் விரைவில் இணைவதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் செல்வராகவனின் ட்வீட் ரசிகர்களுக்கு மேலும் உற்சாகத்தை கொடுத்துள்ளது. 

தனுஷ் படம் பற்றிய தகவல் | exciting announcement on dhanush upcoming project

ஒரே நாளில் இரண்டு அதிரடியான அப்டேட்ஸ் கிடைத்திருப்பதால், தனுஷ் ரசிகர்கள் செம குஷியில் இருக்கின்றனர். 

 

தொடர்புடைய இணைப்புகள்

தனுஷ் படம் பற்றிய தகவல் | exciting announcement on dhanush upcoming project

People looking for online information on Dhanush, Karnan, Mari Selvaraj, Selvaraghavan will find this news story useful.