Reliable Software
www.garudabazaar.com
www.garudabazaar.com

"அடுத்த வருஷம் KGF-அ மறந்து Thalapathy65 Stunt-அ பத்தி தான் பேசுவீங்க!".. வைரல் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

everyone will forget KGF talk about Thalapathy65

இதனைத் தொடர்ந்து விஜயின் தளபதி65, தளபதி66, தளபதி67 படங்கள் குறித்த செய்திகள் வெளியாகத் தொடங்கின. அதன்படி தளபதி65-வது படமானது சன் பிக்ஸர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தயாராகிறது. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

இதேபோல் தளபதி66, தளபதி67 படங்களுக்கு விஜய் மீண்டும் லோகேஷ் கனகராஜ் மற்றும் அட்லீயுடன் இணையவுள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. எனினும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவரவில்லை என்பதால் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இதனிடையே தளபதி65 படத்தின் சண்டைப்பயிற்சியை அளித்துவரும் அன்பறிவ் மாஸ்டரின் டீமைச் சேர்ந்த திலீப் குமார் என்பவர் ஒரு வீடியோ குறிப்பில், ‘அடுத்த வருடம் கேஜிஎப்ஃ படத்தின் சண்டைக் காட்சிகளையே மறந்து தளபதி65 பட சண்டைக்காட்சிகளைப் பற்றி பேசிக்கொண்டிருப்பீர்கள். அந்த அளவுக்கு பவர் பேக்காக வரவிருக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார். இதனை விஜய் ரசிகர்கள் தங்கள் வலைப்பக்கங்களில் பகிர்ந்துள்ளனர்.

யாஷ் நடிப்பில் உருவாகி பெரும் வரவேற்பைப் பெற்ற கேஜிஎஃப் படத்தின் பிரம்மாணடமான 2வது பாகம் தற்போது உருவாகியுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி பிரம்மிக்க வைத்தது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: 'கால் தூக்கி நின்னான் பாரு'.. ட்ரெண்ட் ஆகும் ‘கண்டா வரச்சொல்லுங்க‘ ராயப்பன் வெர்ஷன்..

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

everyone will forget KGF talk about Thalapathy65

People looking for online information on KGF, Kgf 2, Master, Thalapathy66, Vijay, Yash will find this news story useful.