www.garudabazaar.com
www.garudabazaar.com

“இறுதி சடங்குக்கு போகமாட்டேன்.!”.. ரசிகரின் தற்கொலை தொடர்பாக KGF Yash!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கேஜிஎஃப் ஹீரோ யாஷ் தமது இறுதி சடங்கில் கலந்து கொள்ள வேண்டும் என்று லெட்டர் எழுதிவைத்துவிட்டு அவரது ரசிகர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

KGF Yash reacts for fan suicide யாஷ் நடிகர் ரசிகர் தற்கொலை

Besagarahalli பகுதியில் இருந்த பெட்ரோல் பங்க் ஒன்றில் ஊழியராக இருந்தவர் கர்நாடகாவின் பெங்களூரை அடுத்த மாண்டியா பகுதியில் உள்ள கோடிடோடி கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணா எனும் 25 வயது வாலிபர்.  தந்தையை இழந்த இவர், தமது தாயார் மற்றும் மூத்த சகோதரருடன் வசித்து வந்தார்.  கேஜிஎஃப் பட ஹீரோ யாஷ் மற்றும் முன்னாள் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா ஆகியோரின் தீவிர ரசிகராக இருந்த ராமகிருஷ்ணா, கடும் மன அழுத்தத்தில் இருந்ததால் பிப்ரவரி 17-ஆம் தேதி தனது வீட்டில் ஆளில்லாத சூழலில் தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து வீட்டுக்கு வந்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து கதறியுள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார், ஒரு லெட்டரை கைப்பற்றினர். அதில், “நான் ஒரு தந்தைக்கு நல்ல மகனாகவும், சகோதரனுக்கு நல்ல சகோதரனாகவும், காதலியின் மனதில் இடம்பிடிக்க முடியாத நபராகவும் இல்லை. அதனால் வாழ்வில் இனி எனக்கு எதுவும் இல்லை. என் விருப்பங்கள் இரண்டு. எனது அபிமான நட்சத்திரங்களான யாஷ் மற்றும் முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆகியோர் கலந்து கொள்ள வேண்டும்” என கோரிக்கை வைத்திருந்தார்.

KGF Yash reacts for fan suicide யாஷ் நடிகர் ரசிகர் தற்கொலை

இதை அறிந்த சித்தாரமையா அந்த வாலிபரின் இறுதிச்சடங்கில் கலந்து, அவரது கடைசி ஆசையை பூர்த்தி செய்யும் விதமாக கோடிடோடி கிராமத்திற்கு வந்தார். அப்போது, “இவரை நான் சந்தித்தாக நினைவில்லை. ஆனால் இப்படி ஒரு சூழலில்தான் பார்க்க வேண்டுமா? இத்தனை இளம் வயதில் யாரும் வாழ்க்கையை முடித்துக் கொண்டுவிடக்கூடாது” என்று உருகிப் பேசியுள்ளார். 

இதேபோல, கேஜிஎஃப் ஹீரோவான யாஷ் ராமகிருஷ்ணாவின் மரணம் குறித்து தமது ட்விட்டரில் இரங்கல் தெரிவித்ததுடன்  “ரசிகர்களின் கைத்தட்டல்களும், விசில் சத்தமும் எங்கள் வாழ்க்கையில் ஊக்குவிக்கின்றன. பெருமையும் கூட. ஆனால் அதே சமயம், இந்த 25 வயதிலேயே ராமகிருஷ்ணாவின் தற்கொலை முடிவுக்கு பெருமைப்பட முடியுமா? மற்றவர்களுக்கு இதுஒரு முன்மாதிரியாக இருந்துவிடக் கூடாது. அவர் நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும். ஓம் சாந்தி” என குறிப்பிட்டுள்ளார்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிர் விலை மதிப்பில்லாதது.  தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

This news piece may be triggering. If you or your loved ones need help, call on these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata).

ALSO READ: வெளியான கால்ஸ் பட சிங்கிள் டிராக்.. "சித்து நீங்க பாத்துட்டு இருப்பீங்க" - கதறும் ரசிகர்கள்!

“இறுதி சடங்குக்கு போகமாட்டேன்.!”.. ரசிகரின் தற்கொலை தொடர்பாக KGF YASH! வீடியோ

KGF Yash reacts for fan suicide யாஷ் நடிகர் ரசிகர் தற்கொலை

People looking for online information on KGF, Kgf 2, KGF Tamil, Yash will find this news story useful.