www.garudabazaar.com

“Raju குளிக்க போறேனு சொன்னா கூட memes தான்! அவர் Top லெவல்”..BiggBoss-ல் உடைத்து சொன்ன Sarathkumar!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Raju Jeyamohan: பிரபல விஜய் டிவி நடிகரும், இயக்குநர் கே.பாக்யராஜிடம் உதவியாளராக இருந்தவருமான, ராஜூ ஜெயமோகன் பிக்பாஸ் வீட்டில் எண்டர்டெயின்மெண்ட், காமெட்டி, சைலண்ட்டாக கலாய்ப்பது போன்ற தமது இயல்புகளால் அனைவரையும் கவனிக்க வைத்தவர்.

even raju went to bath it becomes meme says sarathkumar biggboss

Thuglife மன்னன்

Thuglife கொடுத்து, ஜாலியாக கலயாப்பதில் மன்னன் என்று இணையவசிகளால் குறிப்பிடப்படுகிறார் ராஜூ. ராஜூவை பொருத்தவரை, பிக்பாஸ் வீட்டுக்குள் நடப்பவற்றை போகிற போக்கில் ஷட்டிலாக விமர்சித்துவிடுவார்.

அந்த பேச்சில் சிரிப்பும் இருக்கும் அதே சமயம் விமர்சனமும் இருக்கும். ராஜூ மீதும் ஹவுஸ்மேட்ஸ் தீவிர விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். அவற்றை ராஜூ ஏற்றுக்கொண்டும் ஏற்காமலும் இருந்திருக்கிறார். அதே சமயம் ராஜூ சண்டையே போடாமல் இருக்கிறார் என்று ஹவுஸ்மேட்ஸ் தொடர்ச்சியாக விமர்சித்து வந்தனர்.

தேனில் மருந்து குழைத்து கொடுக்கும் வைத்தியர்

ராஜூ ராஜூ சண்டையே போடாமல் இருக்கிறார், பெரிதாக கோபப்பட மாட்டேன் என்கிறார் என்பவை குறித்த விமர்சனங்களுக்கு ஒரு முறை ராஜூ கமல்ஹாசன் முன்னிலையில் விளக்கம் அளித்தார். மேலும், “எதுக்காக சண்டை போடணும்? அதுக்கு அவசியமில்லாதபோது, சாதாரணமா சொல்ல கூடாதாம். எதா இருந்தாலும் சப்புனு அறைஞ்சு சொல்ல சொல்றாங்க போல” என்று ராஜூ ஆதங்கப்பட்டார்.

அப்போது ராஜூ குறித்து பேசிய கமல், “இல்லை, ராஜூ எங்கெல்லாம் வேண்டுமோ, அங்கெல்லாம் தமது விமர்சனத்தை கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார். ஆனால், எங்கப்பா தேனில் மருந்து குழைத்து கொடுக்கும் வைத்தியராக அவர் இருப்பதால், அனைவருக்கும் அவர் கொடுப்பது மருந்து என்பது தெரியவில்லை!”, என குறிப்பிட்டார்.

ராஜூவை மக்கள் காப்பாத்திடுவாங்க

முன்னதாக மாலை அணிவித்து முகத்துக்கு நேராக ஒவ்வொரு போட்டியாளரும் Open நாமினேஷன் செய்ய வேண்டும் என்று பிக்பாஸ் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து சிபிக்கு மாலை அணிவித்து நாமினேட் செய்த நிரூப், “ராஜூவுக்கு மாலை அணிவித்து நாமினேஷன் செய்வது வேஸ்ட். அவனை எப்படியும் மக்கள் காப்பாற்றிவிடுவார்கள்” என கூறியிருந்தார்.

சரத்குமார் கொண்டுவந்த பணப்பெட்டி

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் நடிகர் சரத்குமார் சிறப்பு எண்ட்ரி கொடுத்தபோது ராஜூ குறித்து பேசியிருந்தார். முன்னதாக ஹவுஸ்மேட்ஸ் அனைவரையும் நலம் விசாரித்தார். இதனிடையே நடிகர் சரத்குமார் நடித்த பரம்பரா வலைத்தொடரின் டிரெய்லரையும் பிக்பாஸ் வீட்டுக்குள் ஒளிபரப்பினர். இதனைத் தொடர்ந்து சரத்குமார், தான் கொண்டுவந்த பணப்பெட்டி குறித்து அறிவித்தார்.

ராஜூ குளிக்க போறேனு சொன்னா கூட memes தான்

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொருவரையும் குறித்து பேசிய நடிகர் சரத்குமார், அப்போது ராஜூ குறித்து பேசிய சரத்குமார், “ராஜூ குளிக்க போறேனு சொன்னா கூட memes தான்! அவர் Top லெவல்”என்றதும் ராஜூ ஆச்சரியமாகிறார். மீண்டும் தொடர்ந்த நடிகர் சரத்குமார், “ஆமா ராஜூ நீங்க என்ன சொன்னாலும் வெளியில் இருக்கும் மக்கள் அதை ரசிக்கிறார்கள். அது ட்ரெண்ட் ஆகிறது” என்று குறிப்பிட்டார்.

Also Read: ‘தாமரை உங்களுக்கு தனி வணக்கம்!’..யாரு BiggBoss.. யாரு சரத்குமார்னே தெரில!  

Also Read: இதுவரைக்கும் 10 முறை நாமினேஷன்! ஆனாலும் BiggBoss-ல் நின்று ஆடும் பாவனி! குதூகலத்தில் பாவனி ஆர்மி!

தொடர்புடைய செய்திகள்

even raju went to bath it becomes meme says sarathkumar biggboss

People looking for online information on சரத்குமார், ராஜூ, Raju Jayamohan, Raju jeyamohan, Raju Thuglife, Sarathkumar biggboss entry, Sarathkumar BiggBossTamil5 will find this news story useful.