Reliable Software
www.garudabazaar.com

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடித்த திரைப்படம் பற்றி தெரியுமா... ஆனா ஹீரோவாக அல்ல..Video இதோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அரசியல் மற்றும் சினிமா ஆகியவை தமிழ்நாட்டில் பிரிக்க முடியாத கூறுகளாகும். திராவிட கட்சிகள் தங்கள் சித்தாந்தங்களை பரப்ப சினிமாவை ஒரு கருவியாக பயன்படுத்திய வரலாற்றைக் கொண்டுள்ளன. மேடை நாடகங்கள் முதல் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள் வரை கருணாநிதியின் வலுவாக எழுதப்பட்ட திரைக்கதைகள் தமிழ் அரசியல் வரலாற்றைக் கொண்டுள்ளன.

DMK leader Mk stalin have acted in these films மு.க.ஸ்டாலின் நடித்த திரைப்படம்

எம்.ஜி.ஆரின் திரை ஆளுமை மக்களால் நேசிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பது வெளிப்படையான ஒன்று. அன்று  சூப்பர் ஸ்டார் நடிகர்களாக மாறிய அரசியல்வாதிகளின் வரலாறு நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தி.மு.க.வில் அதிகம் அறியப்படாத நடிகரும் அரசியல்வாதியுமான மு.க.ஸ்டாலின் காப்பாற்றி பலருக்கும் தெரியாத விஷயம் உண்டு. எம்.ஜி.ஆர் அலையை எதிர்கொள்ள கருணாநிதி தனது மூத்த மகன் முத்து மற்றும் ஸ்டாலினை சினிமாவுக்குள் அறிமுகப்படுத்தினார்.

அப்படி மு.க.ஸ்டாலின் 1984-ல் தனது 31வது வயதில் முதல் தேர்தலில் தோல்வியடைந்த பின்பு இரண்டு படங்கள் மற்றும் ஒரு சீரியலில் நடித்தார். அவர் தனது முதல் படத்தில் ஹீரோவாக நடிக்க வில்லை, ஆனால் அவர் ஒரு புரட்சியாளனாக நடித்தார். 1987-ல் வெளியான "ஓரே ரத்தம்" படத்தில், ஸ்டாலின் சாதி எதிர்ப்பு திராவிட சித்தாந்தம் பற்றி திரையில் கருத்துக்களை பரப்பினார். ஸ்டாலினின் அடுத்த படம் "மக்கள் ஆணையிட்டால்" . இந்த படத்தில் அவர் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்துடன் சேர்ந்து நடித்தார். இருப்பினும், "குறிஞ்சி மலர்" என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் தான் ஸ்டாலின் அதிகபட்ச ரீச் பெற்றார். இந்த தொடர் டிடி-யில் ஒளிபரப்பப்பட்ட ஒரு நாவலின் தழுவல் ஆகும். அதில் ஸ்டாலின் திராவிட கவிஞர் வேடத்தில் நடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடித்த திரைப்படம் பற்றி தெரியுமா... ஆனா ஹீரோவாக அல்ல..VIDEO இதோ..! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

DMK leader Mk stalin have acted in these films மு.க.ஸ்டாலின் நடித்த திரைப்படம்

People looking for online information on Karunanidhi, Stalin will find this news story useful.