www.garudabazaar.com

சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் குறித்து ரஜினியின் ட்வீட்டுக்கு உதயநிதி பதில்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில் விசாரணைக்காக காவல்துறையினரால் அழைத்து செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த விவகாரம் நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் அனைவரும் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இந்த சம்பவம் தொடர்பாக தானாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இந்த விவகாரம் குறித்து ட்விட்டர் பக்கம் வாயிலாக கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், ''தந்தையும் மகனையும் சித்ரவதை செய்து மிருகத்தனமாகக் கொன்றதை மனித இனமே எதிர்த்து கண்டித்த பிறகும் காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட் எதிரிலேயே சில காவலர்கள் நடந்து கொண்ட முறையும், பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சியடைந்தேன். சம்பந்தபட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆக வேண்டும் விடக்கூடாது. சத்தியமா விடக்கூடாது'' என்று கூறியிருந்தார்.

அதற்கு பதிலளித்த நடிகரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என நீதிமன்றம் ‘பல’ நாட்களுக்கு முன்பே குறிப்பிட்டுள்ளது. அக்குடும்பத்துக்கு நீதிகிடைக்க தமிழக முதல்வரை எழுப்பும் தலைவர் முக ஸ்டாலினின் தொடர் முயற்சியில் இணைந்துகொண்ட சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு நன்றி'' என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Udhayanidhi Stalin replies to Rajinikanth's tweet about Jayaraj Fenix goes viral | ஜெயராஜ், பென்னிக்ஸ் குறித்து ரஜினியின் ட்வீட்டுக்கு உதயநிதி

People looking for online information on Fenix, Jayaraj, Rajinikanth, Udhayanidhi Stalin will find this news story useful.