www.garudabazaar.com

தங்கம் நயன், குழந்தைகள் 😍.. அடுத்து #AK62.. விக்கியின் 20 Two Two.. நெகிழ்ச்சி பதிவு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் விக்னேஷ் சிவன் போடா போடி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார்.

Director Vignesh shivan Emotional New Year wish Post goes viral

தொடர்ந்து நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம், உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் கடைசியாக காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

இதில் நானும் ரவுடிதான் திரைப்படத்தின் போது நயன்தாராவை இயக்கிய விக்னேஷ் சிவன் அவருடன் காதல் மலர 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினர் வாடகை தாய் முறை மூலம் இரண்டு குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகி உள்ளனர்.

இந்நிலையில் 2022 ல் கடைசியாக உள்ள two two என்கிற வார்த்தைகளை குறிப்பிட்டு, நான்கு பகுதிகளாக தம்முடைய புத்தாண்டு செய்தியை விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார்.

இதன் முதல் பகுதியில், "2022 என் வாழ்க்கையில் மிகச் சிறந்த பகுதி என் தங்கம் நயன்தாராவை திருமணம் செய்து கொண்டேன்.‌ என் கனவு குடும்பத்தின் தருணங்களை பெற முடிந்ததுடன் லெஜன்ட் மற்றும் சூப்பர் ஸ்டாரின் ஆசிர்வாதங்களை பெற முடிந்தது." எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

இந்த பதிவில் இரண்டாவது பகுதியில், "தினமும் நான் பார்த்து ஆனந்த கண்ணீர் விட இரண்டு மகன்கள். ஒவ்வொரு முறையும் அவர்களை நான் முத்தமிடுவதற்கு முன்பே என் கண்ணீர் தொட்டு விடுகிறது. டூ பிளஸ்டாக (மிகவும் ஆசீர்வதிக்கப்பட்ட) உணர்கிறேன்." என தெரிவித்துள்ளார்.

 

மூன்றாவது பகுதியில், எனக்கு மிகவும் பிடித்து எழுதி இயக்கிய என் இதயத்துக்கு மிகவும் நெருக்கமான காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெளியானது. அருமையான நடிகர்கள் மற்றும் என்னுடைய ராஜா அனிருத் ஆகியோருடன் பணிபுரிந்ததுடன், திரைப்படம் கமர்சியலாக வெற்றி பெற்றதற்கு மகிழ்ச்சி. விமர்சன ரீதியாக இத்திரைப்படம் இன்னும் சில வருடங்கள் கழித்து வெற்றி பெறும்" என குறிப்பிட்டுள்ளார்.

 

தம்முடைய நான்காவது பகுதியில்,"சென்னையில் நடந்த செஸ் ஒலிம்பியாட் நிகழ்வை இயக்க கொடுக்கப்பட்ட மிகப் பிரமாண்டமான வாய்ப்புக்கு நன்றி. அத்துடன் ஐஏஎஸ், ஐபிஎஸ், அமைச்சர் பெருமக்கள் அனைவருடனும் பணிபுரிந்தது மிகவும் பெருமை. குறிப்பாக முதல்வர் ஸ்டாலின், இசைப்புயல் ஏ ஆர் ரகுமான், உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருடன் அன்றைய இரவு உணவு அருந்தியது என் வாழ்க்கையின் மிகச் சிறந்த தருணம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

இந்த வாழ்த்துச் செய்திகள் ஐந்தாவது பகுதியில் தங்களுடைய தயாரிப்பிலான நயன்தாரா நடித்த கனெக்ட் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக வெளியாகி ஒளிபரப்பாகிக் கொண்டிருப்பதையும் குறிப்பிட்டதுடன் பேராதரவு தரும் ரசிகர்களுக்கு நன்றியும் தெரிவித்து இருக்கிறார்.

 

இறுதியாக தம் வாழ்வில் சிறந்த பகுதியாக அடுத்ததாக அஜித்தை அவருடைய 62வது திரைப்படத்தில் இயக்கவிருப்பதாகவும், லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் சுபாஷ்கரன் தயாரிப்பிலான இந்த திரைப்படத்துக்காக தான் ஆவலுடனும் இருப்பதாகவும் குறிப்பிட்டவர் சின்ன சின்ன விஷயங்கள் தரும் சந்தோஷத்தை அனுபவிக்க வேண்டும். பெரிய விஷயம் தானாக அதற்கான இடத்தை பெறும் என்று கூறி அனைவருக்கும் 2023 பிரம்மாண்டமாக அமைவதற்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

 

தொடர்புடைய இணைப்புகள்

Director Vignesh shivan Emotional New Year wish Post goes viral

People looking for online information on Director, Nayanthara, Vignesh shivan will find this news story useful.