'வெண்ணிலாக் கபடி குழு', 'நான் மகான் அல்ல', 'பாண்டிய நாடு' படங்களின் மூலம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர் சுசீந்திரன். இவரது இயக்கத்தில் சமீபத்தில் 'சாம்பியன்' திரைப்படம் வெளியாகியிருந்தது.

இந்த படத்தில் நரேன், விஸ்வா, மிருணாளினி, மனோஜ் பாரதிராஜா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு அரோல் குரோலி இசையமைக்க, சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்த படம் ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இயக்குநர் சுசீந்திரன் இன்று (24-01-2020) காலை வாக்கிங் செல்லும் போது ஏற்பட்ட சிறு விபத்து காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் அவருக்கு கையில் முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் அவர் 3 வாரங்களுக்கு ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
Tags : Suseenthiran, Champion, Accident