ஃபுட் பாலை மையப்படுத்தி சுசீந்திரன் இயக்கியுள்ள சாம்பியன் டிரெய்லர் இதோ!
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Dec 02, 2019 04:45 PM
நடிகர் சசிக்குமார் நடிப்பில் வெளியான ‘கென்னடி கிளப்’ திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் சுசீந்திரன் ‘சாம்பியன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

களஞ்சியம் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள சாம்பியன் திரைப்படத்தில் புதுமுக நடிகர் விஸ்வா ஹிரோவாகவும், நடிகைகள் மிர்ணாளினி, சௌமியா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இவர்களுடன், நரேன், மனோஜ் பாரதிராஜா, முன்னாள் இந்திய கால்பந்து வீரர் ராமன் விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்
பிசாசு’, ‘துப்பறிவாளன்’ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த அர்ரோல் கரோலி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
ஃபுட் பாலை மையப்படுத்தி சுசீந்திரன் இயக்கியுள்ள சாம்பியன் டிரெய்லர் இதோ! வீடியோ