RRR Others USA
www.garudabazaar.com

மாலத்தீவில் RRR நடிகை ஆலியா பட்.. நெருக்கமாக கூட இருக்கிறது யாருனு தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

RRR பட கதாநாயகி ஆலியா பட் மாலத்தீவில் தன் சகோதரியோடு இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

On RRR day Alia bhatt sensational maldives photo on Instagram

RRR FDFS: படம் எப்படி இருக்கு? தெறிக்க விடும் public கமெண்ட்ஸ்.. வீடியோ!

ஆலியா பட்டின் பாலிவுட் அறிமுகம்

பாலிவுட்டின் வளர்ந்து வரும் இளம் நடிகையாக உருவாகியுள்ளார் ஆலியா பட். இவர் பாலிவுட்டின் முக்கியமான இயக்குநரும் தயாரிப்பாளருமான மகேஷ் பட் மற்றும் பிரிட்டிஷ் நடிகை சோனி ரஸ்தான் இவர்களின் மகள் ஆவர். குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்துள்ள இவர் 2012ஆம் ஆண்டு கரண் ஜோகர் இயக்கத்தில் வெளியான ஸ்டுடென்ட் ஆஃப் தி இயர் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். தொடர்ந்து இவர் நடித்த Two States, Highway, Udta Punjab, Raazu, Gully boy போன்ற பல படங்கள் இவரை பாலிவுட்டின் முக்கிய இடத்தில் சேர்த்தது. கடைசியாக இவர் நடித்த  Gangubhai khaidwadi படமும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

RRR  படத்தில் ஆலியா

தென்னிந்தியா மொழிகளில் இவரை நடிக்க வைக்க பலரும் முயற்சி செய்து கொண்டிருந்தபோது ராஜமௌலி இவரை தனது பிரம்மாண்ட படமான RRR  படத்தில் ராம்சரன் ஜோடியாக சீதா என்னும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தார். பாகுபலியின் இமாலய வெற்றிக்கு பிறகு ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் NTR கதாநாயகர்களாக நடிக்கும் திரைப்படம் RRR.

On RRR day Alia bhatt sensational maldives photo on Instagram

இவர்களுடன் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் செந்தில்குமார் ISC ஒளிப்பதிவு செய்கிறார், இசையமைப்பாளர் கீரவாணி இசையமைக்கிறார். எடிட்டிங் பணிகளை ஸ்ரீகர் பிரசாத் கையாள்கிறார். DVV Entertainment சார்பில் திரு. தானய்யா பிரம்மாண்டமாக தயாரித்த இப்படம் உலகமெங்கும் இன்று வெளியாகியுள்ளது.

பட் சகோதரிகள்

ஷாஹீன் பட்  ஆலியா பட்டின் தங்கை ஆவார். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் தனது தங்கையோடு தான் இருப்பார் ஆலியா. சில தினங்களுக்கு முன்பு ஆலியா தனது 29வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக மாலத்தீவு சென்றார். அவருடன் ஷாஹீன் மற்றும் அவர்களது தாய் சோனி ரஸ்தான் ஆகியோரும் சென்றனர்.  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஆலியா ஷாஹீனுடன் இருக்கும் புதிய  படத்தைப் பகிர்ந்துள்ளார், அதில் ஆலியா Floral printed உடையிலும்,ஷாஹீன் Magenta நிற ஆடையிலும் மகிழ்ச்சியாக போஸ் கொடுத்தபடி  இருக்கின்றனர். அந்த பதிவின் தலைப்பில்  ஆலியா , “Sister appreciation post" என பதிவிட்டுள்ளார்.

On RRR day Alia bhatt sensational maldives photo on Instagram

Highway. Udta Punjab, Raazi போன்ற படங்களுக்காக Filmfare மற்றும் பல விருதுகளைப் பெற்றுள்ள ஆலியா பட் தற்போது ரன்பீர் கபூர், அமிதாப் பச்சன்  ஆகியோருடன் பிரம்மாஸ்திரா, ரன்வீர் சிங்குடன் ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி படத்திலும் ஆலியா நடித்து வருகிறார்.

"கடலுக்கே ஜுரம் வந்துரும்.." பிகினியில்.. சன்னி லியோன்.. மாலத்தீவு on சன்னி கண்ட்ரோல்..

தொடர்புடைய இணைப்புகள்

On RRR day Alia bhatt sensational maldives photo on Instagram

People looking for online information on Alia Bhatt, Alia bhatt Maldives Photos, ஆலியா பட், மாலத்தீவு, Maldives, RRR will find this news story useful.