ET Others
www.garudabazaar.com

எதற்கும் துணிந்தவன் interval-ல் செம்ம சர்ப்ரைஸ்… கொண்டாடி தள்ளிய விஜய் ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இன்று ரிலீஸ் ஆகியுள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

Arabic kuthu song playing in the interval of ET

பாலிவுட் நடிகருடன்.. அரபிக்குத்து டான்ஸ் போட்ட 'தளபதி 66' நடிகை.. மூவ்மென்ட்ஸ் சும்மா அள்ளுது

இரண்டரை ஆண்டுகளுக்குப் பின் திரையில் சூர்யா

நடிகர் சூர்யா நடிப்பில், இன்று (10.03.2021) திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் 'எதற்கும் துணிந்தவன்'. இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த சூர்யாவின் 40வது திரைப்படம் இது. சூர்யா நடிப்பில் சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு, இந்த திரைப்படம் தியேட்டரில் வெளியாகிவுள்ளது. இதற்கு முன்பு அவரின் நடிப்பில் வெளியாகியிருந்த 'சூரரைப் போற்று' மற்றும் 'ஜெய்பீம்' ஆகிய இரண்டு திரைப்படங்களும், ஓடிடி தளத்தில் வெளியாகியிருந்தது. 'காப்பான்' திரைப்படத்துக்குப் பிறகு திரையரங்கில் வெளியாகும் சூர்யாவின் திரைப்படம் ’எதற்கும் துணிந்தவன்’தான் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 5 மொழிகளில் ஒரே நாளில் PAN INDIA படமாக வெளியாகி உள்ளது.

முதல் நாள் முதல் காட்சி

இந்த படத்தில் சூர்யாவோடு சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், பிரியங்கா மோகன், வினய், புகழ் மற்றும் சூரி ஆகியோர் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளனர். இமான் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார். இன்று காலை படம் வெளியான நிலையில் முதல் நாள் முதல் காட்சிக்கு  படத்தில் நடித்துள்ள நடிகர்களான புகழ், வினய் ஆகியோர் சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள ரோஹினி திரையரங்கில் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்தனர். படத்துக்கு திரையரங்கில் இதுவரை நல்ல வரவேற்புக் கிடைத்து வருகிறது.

Arabic kuthu song playing in the interval of ET

இண்டர்வெல்லில் சர்ப்ரைஸ்

இந்நிலையில் எதற்கும் துணிந்தவன் படத்தின் இடைவேளையின் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக பீஸ்ட் படத்தில் இடம்பெற்றுள்ள சமீபத்தில் வெளியாகி வைரல் ஹிட்டாகியுள்ள அரபிக்குத்து பாடல் ஒளிபரப்பப்பட்டுள்ளது. எதற்கும் துணிந்தவன், பீஸ்ட் ஆகிய இரண்டு படங்களையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிப்பதால் இடைவேளையில் அரபிக்குத்து பாடலை இணைத்துள்ளனர். இதைப் பார்த்த ரசிகர்கள் பாடலுக்கு தாங்களும் ஆடிப்பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த தகவல் இப்போது தீயாய் பரவி வரும் நிலையில் இந்த பாட்டுக்காகவே விஜய் ரசிகர்கள் அதிகளவில் எதற்கும் துணிந்தவன் படத்துக்கு படையெடுக்க வாய்ப்புள்ளது.

Arabic kuthu song playing in the interval of ET

சாதனைப் படைத்து வரும் அரபிக்குத்து

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தளபதி விஜய், நடிகை பூஜா ஹெக்டே, இயக்குநர் செல்வராகவன், நடிகர் கிங்ஸ்லி, நடிகர் யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் விரைவில் ரிலிஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே பீஸ்ட் படத்தின் முதல் சிங்கிள் பாடலான அரபிக் குத்து பாடல் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியானது. இந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார். இந்த பாடல் உருவான விதம் குறித்து சிவகார்த்திகேயன், அனிருத் மற்றும் நெல்சன் இடம்பெற்ற ஜாலியான ப்ரோமோ வெளியாகி வைரலானதுடன், பாடல் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது.

Arabic kuthu song playing in the interval of ET

இணையத்தில் சாதனை

எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக வெளியான அரபிக்குத்து பாடல் இன்ஸ்டண்ட் ஹிட் ஆனது. அது மட்டுமில்லாமல் ரிலீஸ் ஆனது முதல் இப்போதுவரை இணையத்தில் அதன் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே வருகிறது. நேற்று வரை இந்த பாடலைப் பார்த்தவர்களின் எண்ணிக்கை 150 மில்லியனைக் கடந்துள்ளது. இப்போது பெரியத்திரையில் இந்த பாடல் வெளியாகியுள்ளதால் அந்த பாடலைக் காண ரசிகர்கள் மத்தியில் மேலும் ஆர்வம் எழுந்துள்ளது.

மொரட்டு சிங்கிள் கேங்கில் சிம்புவா? பிரேம்ஜி பகிர்ந்த செம வைரல் மீம்...

தொடர்புடைய இணைப்புகள்

Arabic kuthu song playing in the interval of ET

People looking for online information on Arabic Kuthu song, எதற்கும் துணிந்தவன், சூர்யா, Beast Movie, ET movie, Etharkum Thuninthavan, Suriya, Vijay will find this news story useful.